கவசம் புக்குவைத்(து) அரன்கழல் | கருதுஞ் சித்தனிற் கவன்றியல் | கரணங் கட்டுதற்(கு) அடுத்துள | களகம் புக்குநற் கவந்தியன், |
அவசம் புத்தியிற் கசிந்துகொ(டு) | அழுகண் டத்துவைத் தளித்தனன், | அனகன், குற்றமற் றபண்டிதன் | அரசெங் கட்கொர்பற் றுவந்தறு |
பவசங் கைப்பதைப் பரஞ்சுடர் | படிறின் றித்தனைத் தொடர்ந்தவர் | பசுபந் தத்தினைப் பரிந்(து)அடு | பரிசொன் றப்பணிக்கு(ம்) நன்றுமே. | 10 |
சிட்டன் - மேன்மையுடையவன். பொடி - திருநீறு. “பைம்பொடி” எனப் பசுமை கூறியது அன்போடு அணியப் படுதல் பற்றி. ‘விருப்பம்’ என்னும் பொருளதாகப் ‘பெள்’ என்னும் முதனிலை ‘டு’ என்னும் இறுதி நிலையோடு புணர்ந்து, ‘பெண்டு’ என வருதல் போல ‘வெண்மை’ என்னும் பொருளதாகிய ‘தவள்’ என்னும் முதனிலை, ‘டு’ என்னும் இறுதி நிலையோடு புணர்ந்து, “தவண்டு” என வந்தது. தவண்டு அணி கவசம் - வெள்ளை நிறத்தாய் அணியப்படும் கவசம். வெண்திருநீறு “புக்கு வைத்து” என்பதில் “வைத்து” என்றது அசை. சித்தன் - சித்தத்தை (மனத்தை) உடையவன். இல் கவன்று இயல் கரணம் - இல் வாழ்க்கையில் கவலைகூர்ந்து இயங்குகின்ற மனம் முதலிய அகப் பொறிகள். கட்டுதற்கு - அவைகளைக் கட்டுப்படுத்துதற்கு. அடுத்து உள - பொருத்த மாய் உள்ள. களகம் புக்க நல் கவுந்தியன் - கழுத்தளவும் போர்த்த கந்தைப் போர்வையை உடையவன்; ‘பற்றுக்களை விட்டவன்’ என்றபடி. “கந்தை மிகையாம் கருத்தும்”1எனச் சேக்கிழாரும் கூறினார். கவந்தி - கந்தை. களகம் - கழுத்தில் சுற்றப்படுவது. அவசம் - வசம் இன்மை பரவசம். அழு கண்டம் - அன்பினால். விம்முகின்ற குரல். அளிக்கப்பட்டன திருப்பதிகங்கள் ‘அவைகளைத் தன் குரலில் வைத்திருந்து வெளிப்படுத்தினான்’ என்பதாம். அனகன் - பாவம் இல்லாதவன். அரசு - ஆளுடைய அரசு. ‘திலகன், சித்தன், கவந்தியன், அளித்தனன், அனகன், பண்டிதன் ஆகிய அரசு’ என்க. ஒர் பற்று - ஒப்பற்ற துணை. உவந்து உறு பரஞ்சுடர் -எங்களிடத்து மகிழ்ச்சி கொண்டு வந்து
1.பெரிய புராணம் - நாவுக்கரசர்
|