பக்கம் எண் :

999திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை

அறுசீரடி ஆசிரிய விருத்தம்

1385.நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி

நளினம்வைத் துயினல்லால்,

ஒன்றும் ஆவது கண்டிலம்; உபாயம்மற்

றுள்ளன வேண்டோமால்;

என்றும் ஆதியும், அந்தமும் இல்லதோர்

இகபரத் திடைப்பட்டுப்

பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில்

பொறியில்ஐம் புலனோடே.

11

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசுதேவர் திரு ஏகாதச மாலை முற்றிற்று


பொருந்தியுள்ள பேரொளி. பல சங்கைபதை பரஞ் சுடர் - வினைக் கூட்டம் பதைத்து அழிதற்கு ஏதுவான பேரொளி. இத்தொடரில் மிகுந்துள்ள பகர ஒற்றுக்கள் சந்தம் நோக்கி விரித்தலாய் நின்றன. படிறு இன்றி - வஞ்சனையின்றி. பசு பந்தம் - உயிர்களைப் பசுத்தன்மைப் படச் செய்துள்ள கட்டு. பரிதல் - அறுத்தல். அடு பரிசு ஒன்ற - வெல்லும் தன்மையைப் பொருந்தும்படி. பணிக்கும் - திருவாய் மலர்ந்தருளுவான்; ஆசீர்வதிக்கும். அவனது மொழி நிறைமொழியாதலின். (அவன் ஆசீர்வதித்தபடியே பசு பாசங்கள் அற்றொழியும்) நன்று - நன்றாக; முற்றாக : உம்மை, உயர்வு சிறப்பு.

பாட்டு:11 “என்றும் ஆதியும், அந்தமும்” என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. இகம் பரம் - இப்பிறப்பு வரும் பிறப்பு. இத்தொடர்ச்சி முதலும் முடிவும் அறியப்படாமையின் “என்றும் ஆதியும் அந்தமும் இல் இக பரம்” என்றார். சூழல் - நிலைமை. புகில் - புகலிடமாகப் புகுவதாயின். பொன்றுவார் பொறியில் ஐம்புலனோடே புகும் சூழலில் புகேம் - (பிறவிக் குழியில் வீழ்ந்து) கெடுவார் ஐம்பொறிகள் வழியாக ஐம்புலன்களில் புகுகின்ற அந்த நிலைமையில் யாம் புக மாட்டோம். “புலனோடு” என்றது உருபு மயக்கம்.

அடி நளினம் - திருவடியாகிய தாமரை மலர்களில். ‘ஆதரம் வைத்து உய்யின் அல்லது ஆவது ஒன்றும் கண்டிலம்’ எனக் கூட்டி யுரைக்க. ஆவது - தக்கது. மற்று உள்ளன. உபாயம் - பிறவியைக்