இ
மாணிக்கவாசகர் வரலாறு
இருப்பினும் முற்றும் வெள்ளம் குறையவில்லை.
அதைக்கண்ட பாண்டியன் மதுரை மக்களையெல்லாம் ஒருங்குக்கூட்டி ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பங்கு என்று
அளந்து கொடுத்து ஆற்றின் கரையை அடைக்கும்படி ஆணையிட்டான்.
மண் சுமந்து :
அரன் ஆணையைக் காவலர் ஊர்
முழுவதும் முரசறைந்து அறிவித்தனர். அந்நகரில் பிட்டு விற்று வாழ்க்கை நடத்தும் வந்தி என்னும்
மூதாட்டி தனக்கு அளவு செய்துவிட்ட ஆற்றின் பங்கை அடைக்க ஆள் கிடைக்காமல் வருந்தினாள். நாள்தோறும்
ஆண்டவனிடம் அன்பு செலுத்தி வந்த அவ்வந்தியின் துன்பத்தைத் தவிர்க்க இறைவன் அவளிடம் கூலி
ஆள் போலத் தோன்றினான், ‘யாரேனும் கூலி கொடுத்து என்னை வேலை கொள்வார் உண்டோ?’ என்று
கூவிய வண்ணம் தன்னை வந்தடைந்த அப்பணியாளனைக் கண்ட வந்தி மகிழ்ந்து, ‘நீ எனக்குக் கூலியாளாக
வரவேண்டும் ; அவ்வாறு
வந்து என் ஆற்றின் பங்கை அடைத்துத் தருவாயானால் நான் விற்கும் பிட்டைக் கூலியாகத் தருகிறேன்’
என்று கூறினாள். அதற்கு இசைந்த அக்கூலியாள் அவள் கொடுத்த பிட்டை வாங்கி உண்டு, தாயே! என்
பசி தீர்ந்தது; இனி நீ ஏவிய பணியை நான் செய்து முடிப்பேன் என்று அவள் பங்கை அறிந்து அதை
அடைப்பதற்கு முற்பட்டான்.
பாண்டியன் பிரம்படி :
வந்தியின் கூலிஆளாகிய
சிவபெருமான் மண்ணை வெட்டித் தன் திருமுடியில் எடுத்துச் சென்று கரையில் கொட்டிவிட்டுக் களைப்படைந்தவன்போல
ஓய்வு எடுத்துக் கொள்வதும், வந்தி அளித்த பிட்டை உண்பதும், ஆடுவதும் பாடுவதும் செய்து பொழுது
போக்கினான். வேலை செய்து களைத்தவன் போலக் கூடையைத் தலையணையாக வைத்து உறங்கினான். ஆற்றின்
கரை அடைபட்டதா என்பதைப் பார்வையிட வந்த மன்னனிடம் காவலர், ‘ஊரில் உள்ளோர் ஒவ்வொருவரும்
தத்தம் பங்கை அடைத்து முடித்தனர். பிட்டு விற்கும் வந்தியென்னும் கிழவியின் பங்கு மட்டும்
அடைபடாமல் கிடக்கிறது. வந்திக்கு ஆளாய் வந்த ஒருவன் சரிவரத் தன் பணியைச் செய்யாமல்
பொழுதைக் கழிக்கிறான்; அதனால் அப்பகுதி நூற்றைக் கெடுத்தது குறுணி என்பது போல, ஒருத்தி பங்கு
ஊரார் பங்கையும் கரைக்கிறது’ என்று கூறினர். உடனே அப்பகுதியைப் பார்வையிட வந்த பாண்டியன்
அக்கூலியாளை அழைத்து வரச்செய்து தன்னுடைய கைப்பிரம்பால் முதுகில்
|