வ
மாணிக்கவாசகர் வரலாறு
வியப்புற்ற ஈழமன்னன் வாதவூரரை
வணங்கி ‘அடிகளே என்பெண், பிறவி முதல் ஊமையாக இருக்கின்றாள். அவளைப் பேசும்படிச் செய்தால்
நான் தங்களுக்கு அடிமையாவேன்’ என்று கூறினான். வாதவூரர் அதற்கிசைந்து அப்பெண்ணை அவைக்கு
வரவழைத்து அமர்த்தி, ‘பெண்ணே! இப்புத்தன்
கேட்ட கேள்விகளுக்கு விடைகூறு’ என்று கூறினார். அப்பெண்ணும் அனைவரும் வியந்து மகிழும்படி, புத்த
குருவின் வினாக்களை மணிவாசகர் தாமே அப்பெண்ணிடம் கேட்க அப்பெண் அதற்கு விடையளித்தாள்.
அந்த வினா - விடைகள் தாம் 46. திருச்சாழல் என்ற திருப்பதிகமாக அமைந்தது. ஈழமன்னனும்
அதைக்கண்டு மகிழ்ந்து மணிவாசகர் திருவடிகளிலே விழுந்து வணங்கிச் சைவஞ் சார்ந்தான். அவையோர்
அனைவரும் மணிவாசகப் பெருமானைப் போற்றித் துதித்தார்கள். ஈழ மன்னம் திருநீறும் கண்டிகையும்
பூண்டி அடிகளைப் பணிந்து புத்த குருவும், மற்றவர்களும் பேசும் திறம்பெற அருள் செய்ய வேண்டுமென்று
வேண்டினான். மணிவாசகர் அவர்கள் மீது திருவருட் பார்வையைச் செலுத்தினார். அவ்வளவில்
அனைவரும் ஊமை நீங்கிப்பேசும் திறம் பெற்று மணிவாசகரை வணங்கித் தாங்கள் செய்த குற்றத்தை
மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். புத்தகுருவும் அவரைச் சூழ வந்த அனைவரும் சைவர்களாக மாறினர்.
மணிவாசகரும் திருக்கோயிலுக்குட் சென்று சபாநாயகரை வணங்கித் தம் தவச்சாலைக்கு எழுந்தருளினார்.
இவ்வாறு தவச்சாலையில் தங்கியிருந்த காலத்தில் மணிவாசகர் 47. திருப்படையாட்சி, 48. திருப்படையெழுச்சி,
49. அச்சோப் பத்து, 50. யாத்திரைப்பத்து என்ற பதிகங்களைப் பாடியருளினார்.
இறைவன் திருவாசகம் கேட்டு
எழுதியது:
இவ்வாறு சிதம்பரத்தில்
மணிவாசகர் வாழ்ந்து வரும் நாள்களில், ஒரு நாள் அந்தணர் ஒருவர் அவரிடம் வந்து தான் பாண்டிய
நாட்டைச் சேர்ந்தவரென்றும், சிவபிரான் மணிவாசகருக்காகச் செய்த அருட்செயல் உலகெங்கும்
பரவியுள்ளது என்றும் வியந்து கூறி மணி வாசகர் பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச்
சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார். மணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தித் தாம் பாடிய திருவாசகப்
பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந்தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்து
‘பாவைபாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக’ என்று கேட்டுக் கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு
இணங்கிய மணிவாசகர் இறைவனது திருவடிப்பேற்றை உட்கருத்தாகக் கொண்ட இனிய கோவையார் என்ற
நூலை அருளிச் செய்தார். கேட்ட
|