பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
118

அத

அதிகார வரலாறு

    இயற்கை பாங்க னிடந்தலை மதியுட
    னிருவரு முள்வழி யவன்வர வுணர்தன்
    முன்னுற வுணர்தல் குறையுற வுணர்த
    னன்னிலை நாண நடுங்க நாடன்
    மடல்குறை நயப்பு வழிச்சேட் படுத்த
    லிடமிகு பகற்குறி யிரவுக் குறியோ
    டொருவழித் தணத்த லுடன்கொண் டேகல்
    வரைவு முடுக்கம் வரைபொருட் பிரிதன்
    மணஞ்சிறப் போதல் வார்புவி காவ
    லிணங்கலர்ப் பொருத்தல் வேந்தற் குற்றுழி
    பொருள்வயிற் பிரிதல் பரத்தையிற் பிரிதலென்
    றருள்வயிற் சிறந்த வகத்திணை மருங்கி
    னிருளறு நிகழ்ச்சி யிவையென மொழிப.

-திருக்கோவைநெறிவிளக்கம்


அதிகார வரலாறு - இதன் பொருள்: இயற்கைப்புணர்ச்சி, பாங்கற் கூட்டம், இடந்தலைப்பாடு, மதியுடன்படுத்தல், இருவருமுள்வழி யவன்வரவுணர்தல், முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், நாண நாட்டம், நடுங்கநாட்டம், மடல், குறைநயப்பித்தல், சேட்படை, பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தணத்தல், உடன்போக்கு, வரைவு முடுக்கம், வரைபொருட்பிரிதல், மணஞ்சிறப்புரைத்தல், ஓதற்பிரிதல் காவற்பிரிதல், பகைதணிவினைப்பிரிதல், வேந்தற் குற்றுழிப்பிரிதல், பொருள்வயிற்பிரிதல், பரத்தையிற்பிரிதல் என இவ்விருபத்தைந்தும் இந் நூற்குக் கிளவிக் கொத்தெனப்படும் அதிகாரங்களாம் என்று கூறுவர் அகத்திணை இலக்கணம் உணர்ந்தோர் என்றவாறு.

அவற்றுள்:-