பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
120

1

இயற்கைப் புணர்ச்சி

1. 1. காட்சி

காட்சி என்பது தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃதொருவியப் பென்னென்றல். அதற்குச் செய்யுள்-

1. திருவளர் தாமரை சீர்வளர்
        காவிக ளீசர்தில்லைக்
  குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
        காந்தள்கொண்டோங்குதெய்வ
  மருவளர் மாலையொர் வல்லியி
        னொல்கி யனநடைவாய்ந்
  துருவளர் காமன்றன் வென்றிக்
        கொடிபோன் றொளிர்கின்றதே.

1

_______________________________________________________________

1. 1 மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
   கதிர்வேலவன் கண்ணுற்றது.

திருவாதவூரடிகள் இத்திருக்கோவையை என்னுதலி யெடுத்துக் கொண்டாரோவெனின்.

    அறிவோ னறிவில தெனவிரண் டாகு
    நெறியினிற் றொகைபெற்று நிரல்பட விரிந்த
    மண்புன லனல்வளி மாவிசும் பெனாஅ
    வெண்மதி செஞ்சுடர் வேட்போ னெனாஅ
    வெண்வகை நிலைஇய வெவ்வகைப் பொருளுந்
    தோற்றநிலை யிறுதி கட்டுவீ டென்னு
    மாற்றருஞ் செயல்வழி மாறாது செயப்பட்டு
    வெருவா வுள்ளத்து வேட்போன் றான்செய்
    யிருவினைப் பயன்றுய்த்து மும்மல னொரீஇப்
    பொருவறு சிவகதி பொற்பினிற் பொருந்தவு
    மேனைய தத்தங் குணநிலை புணரவு
    நிலைஇ யவ்வயி னிமித்த மாகி
    யலகு தவிர்த்த பலவகை யண்டமு
    மின்னுழை வெயிலின் றுன்னணுப் புரைந்து
    தன்னு ளடங்கவுந் தானவற் றுள்ளு

    நுண்ணுணர் வாயு நோக்கரு நுழையிற்