ச
இயற்கைப்
புணர்ச்சி
சிறுமை பெருமைக் கிருவரம் பெய்திப்
போக்கும் வரவும் புணர்வு மின்றி
யாக்கமுங் கேடு மாதியு மந்தமு
நடுவு மிகந்து ஞானத் திரளா
யடியு முடியு மளவா தயர்ந்து
நெடியோ னான்முக னான்மறை போற்ற
வெரிசுடர்க் கனலியி னீங்காது
விரிசுடர்
வெப்பமும் விளக்கமு மொப்பவோர்
பொழுதினிற்
றுப்புற வியற்றுவ தெனவெப்
பொருளுங்
காண்டலு மியற்றலு மியல்பா மாண்டுடன்
றன்னினீங் காது தானவின்று
விளங்கிய
வெண்ணெண் கலையுஞ் சிலம்புஞ் சிலம்படிப்
பண்ணமை தேமொழிப் பார்ப்பதி
காண
வையா றதன்மிசை யெட்டுத்தலை யிட்ட.
மையில் வான்கலை மெய்யுடன்
பொருந்தித்
தில்லை மூதூர்ப் பொதுவினிற்
றோன்றி
யெல்லையி லானந்த நடம்புரி
கின்ற
பரம காரணன் றிருவரு ளதனால்
திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர்
ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச்
செம்புலச் செல்வ ராயினர் ஆதலின்
அறிவனூற் பொருளு முலகநூல் வழக்குமென
இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர்
ஆங்கவ் விரண்டனுள்
ஆகமநூல் வழியி னுதலிய ஞான
யோகநுண் பொருளினை யுணர்த்து தற்கரி
துலகநூல் வழியி னுதலிய பொருளெனு
மலகி றீம்பாற் பரவைக் கண்ணெம்
புலனெனுங் கொள்கலன் முகந்த வகைசிறி
துலையா மரபி னுரைக்கற் பாற்று.
அஃதியாதோவெனின், எழுவாய்க்கிடந்தபாட்டின்
பொருளுரைக்கவே விளங்கும். அஃதேல், இப்பாட்டென்னுதலிற்றோவெனின், அறம், பொருள், இன்பம்,
வீடென்னு நான்கு பொருளினும் இன்பத்தை நுதலி இத்திருக்கோவையின்கணுரைக்கின்ற களவியற்
பொருளினது பொழிப்பிலக்கணத்தையும், அதற்குறுப்பாகிய கைக்கிளைத்
|