பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
124

இன

இயற்கைப் புணர்ச்சி

    இனித் திருமகடங்குந் தாமரை யெனினு மமையுமென்று அமைவுரைத்ததென்னை, இதனையுவமையாக்கக் குறையென்னை யெனின், திருமகளாலே தாமரையுயர்ந்ததாம். தாமரையினது சிறப்புக் கூறிற்றில்லையாம். என்னை, எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்குண்டாகையாலே திருமகளென்று பெயராயிற்று. அங்ஙனம் பெருமையுடையவளும் இதன் சிறப்பு நோக்கியேயிதனிலிருந்தாளல்லது தன்னாலேயிதற்குச் சிறப்புப்பெற வேண்டியிருந்தாளல்லள், ஆகலாற் றாமரைக் கொத்ததும் மிக்கதுமில்லை. அங்ஙனம் பெருமையுடையவளாலும் விரும்பப்பட்டதாகலான் திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என்பது பெற்றாம்.

    இனித் திருவளர்தாமரை சீர்வளர்காவி யென்றனபோல இதனையுங் குருவளர் குமிழென்னாது பூங்குமிழென்ற தெற்றிற் கெனின், முன்னும் பின்னும் வருகின்ற எண்ணிற் பூவைநோக்கியன்று, ஈண்டுச்செய்யுளின்பத்தை நோக்கியும் இதற்காகுபெயரை நோக்கியு மெனவறிக. அஃதென்போலவெனின், “தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று - முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்” (முல்லைக்கலி-1) என்பது போல. கோங்கென இதனை யொழிந்த நான்கிற்கு மடைகொடுத்து இதற்கடை கொடாதது பாலை நிலஞ் சொல்லுதனோக்கி. என்னை, பாலைக்கு நிலமின்றாகலான். ஆயின் மற்றைய நிலம்போலப் பாலைக்கு நிலமின் மையாற் கூறினாராகின்றார் மகளிர்க் குறுப்பிற் சிறந்தவுறுப்பாகிய முலைக்கு வமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடைகொடுக்கக் கடவதன்றோவெனின், அடைகொடுப்பிற் பிறவுறுப்புக்களுடன் இதனையுமொப்பித்ததாம். ஆகலான் இதற்கடைகொடாமையே முலைக்கேற்றத்தை விளக்கி நின்றது, அஃது முற்கூறிய வகையில் திருக்கோயில் திருவாயில் திருவலகு என்றவற்றிற்கு அடைகொடுத்து நாயகராகிய நாயனாரைத் திருநாயனாரென்னாதது போலவெனக் கொள்க.

    இனிஉடனிலைச் சிலேடையாவது ஒரு பாட்டிரண்டு வகையாற் பொருள் கொண்டு நிற்பது. அவ்விரண்டனுள்ளும் இத்திருக்கோவையின்கணுரைக்கின்ற பொருளாவது காமனது வென்றிக் கொடிபோன்று விளங்கி அன்னநடைத்தாய்த் தாமரையே நெய்தலே குமிழே கோங்கே காந்தளே யென்றிப்பூக்களாற் றொடுக்கப் பட்டோங்குந் தெய்வமருவளர்மாலையின் வரலாறு விரித்துரைக்கப் படுகின்றதென்பது. என்றது என்சொல்லியவாறோ வெனின், தாமரை மருதநிலத்துப்பூவாதலான் மருதமும், நெய்தல் நெய்தனிலத்துப் பூவாதலான் நெய்தலும், குமிழ் முல்லைநிலத்துப் பூவாதலான்