ப
இயற்கைப்
புணர்ச்சி
பருங்குன்ற மாளிகை நுண்கள
பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக்
கஞ்சுக
மேய்க்குங் கனங்குழையே.
1.16 ஆடிடத் துய்த்தல்
ஆடிடத் துய்த்தல் என்பது அணிமை
கூறி யகலாநின்றவன், இனி நீ முற்பட்டு விளையாடு; யான் இங்ஙனம் போய் அங்ஙனம் வரராநின்றேன்
என அவளை ஆடிடத்துச் செலுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-
16. தெளிவளர் வான்சிலை செங்கனி
வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன்
னாய்முன்னி
யாடுபின் யானளவா
_______________________________________________________________
கனங்குழாய்; எம் ஊர் பரு குன்றம்
மாளிகை நுண் களபத்து ஒளிபாய-எம்மூரிடத்துப் பெரிய குன்றம் போலும் மாளிகைகளின் நுண்ணிதாகிய
சாந்தினொளி பரந்து; நும் ஊர் கரு குன்றம் வெள் நிறம் கஞ்சுகம் ஏய்க்கும்-நும்மூர்க்கணுண்டாகிய
கரியகுன்றம் வெள்ளை நிறத்தை உடைய சட்டை இட்டதனோடு ஒக்கும் என்றவாறு.
கருங்குன்ற வெண்ணிறமென்பது பாடமாயின்,
நுண்கள பத்தொளி பரப்ப அவ்வொளி நும்மூர்க் கருங்குன்றத்திற்கு இட்ட வெண்ணிறக் கஞ்சுகத்தோடு
ஒக்கும் என்று உரைக்க ஈண்டுரைத்தவாற்றால், தலைமகன் மிக்கோனாதல் வேண்டும், வேண்டவே ஒப்பு
என்னை பொருந்துமாறெனின், “மிக்கோனாயினும் கடிவரை யின்றே” (தொல். பொருள். களவியல்.2.)
என்பதோத்தாகலிற் பொருந்து மென்க. வற்புறுத்தி-வலிபுறுத்தி. இடமணித்தென்றலே வற்புறுத்தலாக
உரைப்பினும் அமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடமணித்தென்று வற்புறுத்தல்.
1.16. வன்புறையின் வற்புறுத்தி
அன்புறுமொழியை அருகுஅகன்றது.
இதன் பொருள்: வளர்
வான் சிலை செம் கனி வெள் முத்தம் திங்களின் வாய்ந்து அளி வளர் வல்லி அன்னாய்-கால் நிமிர்ந்த
பெரிய சிலைகளும் சிவந்த கொவ்வைக்கனியும் வெள்ளிய முத்தங்களும் ஒரு திங்களின்கண்ணே
வாய்ப்ப அளிகள் தங்கும் வல்லியை
|