பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
146

ஒள

இயற்கைப் புணர்ச்சி

    ஒளிவளர் தில்லை யொருவன்
        கயிலை யுகுபெருந்தேன்
    துளிவளர் சாரற் கரந்துங்ங
        னேவந்து தோன்றுவனே.

16

1.17. அருமையறிதல்

   
அருமை அறிதல் என்பது ஆடிடத் துய்த்து அகலாநின்றவன் ஆயவெள்ளத்தையும் அவ்விடத்தையும் நோக்கி, இவனை யான் எய்தினேன் என்பது மாயமோ? கனவோ? இன்னதென்று அறியேன்; இனியிவள் நமக்கு எய்தற்கு அரியவளென அவளது அருமை அறிந்து வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்-

17. புணர்ப்போன் நிலனும் விசும்பும்
        பொருப்புந்தன் பூங்கழலின்
   துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
        லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்

________________________________________________________________

ஒப்பாய்; தெளி-யான் சொன்னவற்றைத் தெளிவாயாக; முன்னி ஆடு-இனி முற்பட்டு விளையாடுவாயாக; ஒளி வளர் தில்லை அளவா ஒருவன் கயிலை உகுபெரு தேன் துளி வளர் சாரல் கரந்து-ஒளிவளராநின்ற தில்லைக்கண் உளனாகிய அளக்கப்படாத ஒருவனது கயிலையிடத்து உகாநின்ற பெருந்தேன்றுளிகள் பெருகுஞ் சாரற் பொதும்பரி லொளித்து; யான் பின் உங்ஙன் வந்து தோன்றுவான்-யான் பின்னும் உவ்விடத்தே வந்து தோன்றுவேன் என்றவாறு.

    தெளிவளர் வான்சிலை என்பதற்கு ஒளிவளரும் சிலையென்று உரைப்பினும் அமையும். திங்களை வல்லிக் கண்ணதாகக் கொள்க. வாய்ந்து என்பது வாய்ப்ப என்பதன் திரிபாகலின், அளிவளரென்னும் பிறவினை கொண்டது. சாரலென்பது: ஆகுபெயர், வன்புறையின்-வற்புறுத்தும் சொற்களால். மெய்ப்பாடு: அது. பயன்: இடம் குறித்து வற்புறுத்தல்.

1.17.  சுற்றமு மிடனுஞ் சூழலு நோக்கி
     மற்றவ ளருமை மன்ன னறிந்தது 


   
இதன் பொருள் : போது இணர் அணி குழல் ஏழை தன் நீர்மை இந்நீர்மை  என்றால் - பூங்கொத்துக்களை அணிந்த குழலையுடைய ஏழைதனது நீர்மை இத்தன்மையாயின்; நிலனும் விசும்பும் பொருப்பும் புணர்ப்போன் - மண்ணையும் விண்ணையும் மண்ணின் கண் உள்ள மலையையும் படைப்போன்; தன் பூ கழல் துணர்ப்போது