இணர
இயற்கைப்
புணர்ச்சி
இணர்ப்போ தணிகுழ லேழைதன்
னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ
அறியேன் புகுந்ததுவே.
1.18. பாங்கியையறிதல்
பாங்கியை அறிதல் என்பது
அருமையறிந்து வருந்தாநின்ற தலைமகன் ஆயத்தோடு செல்லாநின்ற தலைமகளை நோக்க, அந்நிலைமைக்கண்
அவளும் இப்புணர்ச்சி இவளுக்குப் புலனாங்கொல்லோவென உட்கொண்டு எல்லாரையும் போல அன்றித்
தன் காதல் தோழியைப் பல்காற் கடைக்கண்ணாற் பார்க்கக்கண்டு, இவள்போலும் இவட்குச் சிறந்தாள்;
இதுவும் அறியாநிற்றல், அதற்குச் செய்யுள்:
18. உயிரொன் றுளமுமொன்
றொன்றே
சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
_______________________________________________________________
எனக்கு அணி ஆக்கும் தொல்லோன்
- தன்னுடைய பொலிவினை உடைய திருவடியாகிய துணர்ப்போதுகளை எனக்கு முடியணியாக்கும் பழையோன்;
தில்லை சூழ் பொழில் வாய் புகுந்தது-அவனது தில்லைக்கண் உண்டாகிய சூழ்பொழிலிடத்து இவன் புகுந்தது;
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன்-மாயமோ கனவோ! இரண்டும் அன்றி வேறொன்றோ! இன்னதென்றறியேன்
என்றவாறு.
பூங்கழலென்பது பூப்போலும் கழலென
உவமைத் தொகையாய்க் கழலென்னும் துணையாய் நின்றது எனினும் அமையும், வீரக்கழலையுடைய துணர்ப்போதென்று
உரைப்பினும் அமையும். பொழில்வாயிணர்ப்போ தென்பாருமுளர். பிறிதோவென்பதற்கு நனவோ என்பாருமுளர்.
புகுந்ததுவே என்பதில், வகாரம்; விகாரவகையான் வந்தது, சுற்றம்-ஆயம். இடம்-அந்நிலம். சூழல்-அந்நிலத்துள்ளும்
புகுதற்கரிய அப்பொழில், மெய்ப்பாடு்; மருட்கை, பயன்; தலைமகளது அருமையுணர்தல்.
1.18. கடல்புரை யாயத்துக் காதற்
றோழியை
மடவரல் காட்ட மன்ன னறிந்தது.
இதன் பொருள்: என்னொடு
இவட்கு உயர் ஒன்று உளமும்
|