New Page 1
இயற்கைப்
புணர்ச்சி
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்தனருளென
லாகும் பணிமொழிக்கே.
18
_______________________________________________________________
ஒன்று சிறப்பு ஒன்று என்ன
- என்னோடு இவட்கு உயிருமொன்று மனமுமொன்று குரவர்களாற் செய்யப்படுஞ் சிறப்புக்களும் ஒன்றென்று
சொல்லி; பணி மொழிக்கு - தாழ்ந்த மொழியை உடையாட்கு; செவி உற நீள் படை கண்கள் சென்று
பயில்கின்ற - செவியுறும் வண்ணம் நீண்ட படைபோலும் கண்கள் இவள்கட் சென்று பயிலாநின்றன;
அதானல் இவள் போலுமிவட்குச் சிறந்தாள் என்றவாறு.
விண்வாய்
செயிர் ஒன்று முப்புரம் செற்றவன்-விண்ணிடத்துக் குற்றத்தைப் பொருந்தின மூன்று புரத்தையும் கெடுத்தவன்-தில்லை
சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத்தம்-தில்லைச் சிற்றம்பலத்தின்கண் இடைவிடாது ஆடுகின்ற கூத்தையுடையான்
- அருள் எனல் ஆகும் பணிமொழிக்கு-அவன் அருளென்று துணியலாம் பணிமொழிக்கு எனக் கூட்டுக.
அருளென்றது அருளான்வரும் ஆனந்தத்தை.
மெய்ப்பாடு: பெருமிதம், பயன்: ஆற்றாமை நீங்குதல்.
இப்பதினெட்டுப் பாட்டும்
இயற்கைப்புணர்ச்சியையும் அது நிமித்தமாகிய
கிளவியையும் நுதலின.
இதனை இயற்கைப் புணர்ச்சியெனினும், தெய்வப்புணர்ச்சி எனினும், முன்னுறுபுணர்ச்சி எனினும், காமப்புணர்ச்சி
எனினும் ஒக்கும்.
இயற்கைப் புணர்ச்சி
முற்றிற்று,
|