பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
149

2

2. பாங்கற்கூட்டம்

இனிப் பாங்கற்கூட்டம் வருமாறு: தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன், தெருண்டுவரைதல் தலை; தெருளானாயின், தன் பாங்கனானாதல் இடந்தலைப் பாட்டானாதல் இரண்டனுளொன்றாற் சென்றெய்தல் முறைமை யென்ப. அவற்றுள், பாங்கற்கூட்டமாவது-

    நினைதல் வினாத லுற்ற துரைத்தல்
    கழறன் மறுத்தல் கவன்றுரைத் தல்லே
    வலியழி வுரைத்தல் விதியொடு வெறுத்த
    னொந்து கூற னோத னீங்கி
    யியலிடங் கேட்ட லியலிடங் கூறல்
    வற்புறுத் தல்குறி வழிச்சேறல் காண்டல்
    வியந்து  ரைத்தலம் மெல்லிய றன்னைக்
    கண்டமை கூறல் கருத்துக் கேற்பச்
    செவ்வி செப்ப லவ்விடத் தேக
    லீங்கிவை நிற்க விடந்தலை தனக்கு
    மாங்கவண் மெலிதல் பொழில்கண்டு மகிழ்த
    னீங்கா மகிழ்வொடு நிலைகண்டு வியத்த
    றளர்வகன் றுரைத்தன் மொழிபெற வருந்தல்
    கண்புரை வருத்தங் காவ னாண்விட
    னண்பாடு சென்று நன்மருங் கணைத
    லின்றியமை யாமை யாயத் துய்த்த
    னின்று வருந்த னிகழா றைந்துந்
    துன்று பாங்கற் றுறையென மொழிப.

-திருக்கோவைநெறிவிளக்கம்

_________________________________________________________________

    இதன் பொருள்: பாங்கனைநினைதல், பாங்கன்வினாதல், உற்றுதுரைத்தல், கழறியுரைத்தல், கழற்றெதிர்மறுத்தல், கவன்றுரைத்தல், வலியழியுரைத்தல், விதியொடுவெறுத்தல், பாங்கனொந்துரைத்தல், இயலிடங்கேட்டல், இயலிடங்கூறல், வற்புறுத்தல், குறிவழிச்சேறல், குறிவழிக்காண்டல், தலைவனை வியந்துரைத்தல், கண்டமைகூறல், செவ்விசெப்பல், அவ்விடத்தேகல் இப்பதினெட்டுக் கிளவியு நிற்க, இடந்தலை தனக்கும், மின்னிடைமெலிதல், பொழில் கண்டுமகிழ்தல், உயிரெனவியத்தல், தளர்வகன்றுரைத்தல், மொழிபெற வருந்தல், நாணிக்கண்புதைத்தல், கண்புதைக்கவருதல். நாண்விட வருந்தல், மருங்கணைதல், இன்றியமையாமைகூறல், ஆய்த்துய்த்தல், நின்றுவருத்தல் என இவை முப்பதும் பாங்கற்கூட்டமாம் என்றவாறு, அவற்றுள் -