2
பாங்கற் கூட்டம்
2. 2 பாங்கன் வினாதல்
பாங்கன் வினாதல் என்பது தன்னை
நினைந்து வாராநின்ற தலைமகனைத் தான் எதிர்ப்பட்டு அடியிற்கொண்டு முடிகாறுநோக்கி, நின்னுடைய
தோள்கள் மெலிந்து நீ யில்வாறாதற்குக் காரண மென்னோவென்று பாங்கன் முந்துற்று வினாவாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
20. சிறைவான் புனற்றில்லைச்
சிற்றம்
பலத்துமென் சிற்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின்
ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே.
20
________________________________________________________________
பட்டது, பையுள்-நோய்; மயக்கமெனினு
மமையும். மெய்ப்பாடு: அசைவுபற்றி வந்த அழுகை. என்னை,
இளிவே யிழவே யசைவே வறுமையென
விளிவில் கொள்கை யழுகை நான்கே
- தொல். பொருள். மெய்ப்பாட்டியல்.
5
என்றாராகலின். பயன்:
ஆற்றாமை நீங்குதல். மேற்றோழியால் என்குறை முடிக்கலாமன்று கருதிப் பெயர்ந்த தலைமகன் பாங்கனால்
முடிப்பலெனக்கருதினானென்பது. என்னை, தமரான் முடியாக் கருமை முளவாயினன்றே பிறரைக் குறையுற வேண்டுவதென்பது.
19
2.2.
கலிகெழு திரள்தோள் மெலிவது
கண்ட
இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை
வினாயது.
இதன் பொருள் : சிறை
வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என்சிந்தையுள்ளும் உறைவான்-காவலாயுள்ள மிக்க நீரையுடைய
தில்லைச்சிற்றம்பலமாகிய நல்லவிடத்தும் என்னெஞ்சமாகிய தீயவிடத்தும் ஒப்பத்தங்குமவனது;
உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒள் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ-உயர்ந்த மதிலையுடைய
கூடலின்கணாராய்ந்த ஒள்ளிய வினிய தமிழின்றுறைகளிடத்து
|