2
பாங்கற் கூட்டம்
2.3 உற்றதுரைத்தல்
உற்றதுரைத்தல் என்பது எதிர்ப்பட்டு
வினாவாநின்ற பாங்கனுக்கு, நெருநலைநாட் கயிலைப்பொழிற்கட் சென்றேன்; அவ்விடத்து ஒரு
சிற்றிடைச் சிறுமான்விழிக் குறத்தியால் இவ்வாறாயினேனெனத் தனக்குற்றது கூறாநிற்றல். அதற்குச்
செய்யுள் -
21. கோம்பிக் கொதுங்கிமே
யாமஞ்ஞை
குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
தாங்கப் பணைமுலைக்கே
________________________________________________________________
நுழைந்தாயோ?; அன்றி ஏழிசை சூழல்
புக்கோ-அன்றி ஏழிசையினது சூழலின்கட் புகுதலானோ; இறைவா - இறைவனே; தடவரை தோட்கு புகுந்து எய்தியது
என் கொலாம் - பெரிய வரைபோலு நின்றோள்கட்கு மெலியப்புகுந்தெய்தியதென்னோ? எ-று.
தமிழின் றுறைகளாவன ஈண்டு
அகமும் புறமுமாகிய பொருட்கூறு. ஏழிசை யாவன குரல் முதலாயின. சூழலென்றது அவற்றானியன்ற பண்ணும்
பாடலு முதலாயினவற்றை. கொல்; கொலாமென வீறுதிரிந்தது; ஆம்: அசைநிலை
யெனினுமமையும், கலி-புகழான் வருமாரவாரம்; தழை த்த வெனினுமமையும், மெய்ப்பாடு: அணங்குபற்றிவந்த
அச்சம். என்னை,
அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்
பிணங்கே சாலா வச்ச நான்கே.
-தொல். பொருள். மெய்ப்பட்டியல்-8.
என்றாராகலின் பயன்: தலைமகற்கு
உற்றதுணர்தல். 20
2.3. மற்றவன் வினவ
உற்ற துரைத்தது.
இதன் பொருள்: கோம்பிக்கு
ஒதுங்கி மேயா மஞ்ஞை-ஓந்திக்கொதுங்கிப் புறப்பட்டிரைகவராத மயில்; குஞ்சரம் கோள் இழைக்கும்
பாம்பைப் பிடித்து படம் கிழித்தாங்கு-குஞ்சரத்தைக் கோளிழைக்க வல்ல பாம்பைப் பிடித்துப்
படத்தைக் கிழித்தாற்போல; மான் மடம் நோக்கிஅ பணை முலைக்கு தேம்பல் துடி இடை-மானின்
மடநோக்குப்போலும் நோக்கையுடையாளுடைய அப்பணை
|