பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
153

New Page 1

பாங்கற் கூட்டம்

தேம்பற் றுடியிடை மான்மட
        நோக்கிதில் லைச்சிவன்றாள்
    ஆம்பொற் றடமலர் சூடுமென்
        னாற்ற லகற்றியதே.

21

2.2. கழறியுரைத்தல்

   
கழறியுரைத்தல் என்பது உற்றதுரைப்பக்கேட்ட பாங்கன், இஃது இவன்றலைமைப் பாட்டிற்குப் போதாதென உட்கொண்டு, நீ ஒரு சிறுமான் விழிக்கு யான் இவ்வாறாயினேனென்றல் நின்கற்பனைக்குப் போதாதெனக் கழறிக்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

22. உளமாம் வகைநம்மை யுய்யவந்
      தாண்டுசென் றும்பருய்யக்
   களமாம் விடமமிர் தாக்கிய
        தில்லைத்தொல் லோன்கயிலை

______________________________________________________________

முலையானே தேய்தலையுடைய துடிபோலுமிடை; தில்லை சிவன் தாள் ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியது-தில்லைக் கணுளனாகிய சிவனுடைய தாளாகிய பொன் போற்சிறப்புடைய பெரிய தாமரைப்பூவைச் சூடுகின்ற எனது வலியை நீக்கிற்று எ-று.

    குஞ்சரம் தான் உவமையன்றி உவமைக்கடையாய் அதனாற்றல் விளக்கி நின்றது. தடமலர் தான் உவமிக்கப்படும் பொருளன்றி உவமிக்கப்படும் பொருட்கடையாய் அதனாற்றல் விளக்கி நின்றது. அப்பணைமுலைக்கே யென்றிழித்தது இவள் முலையை நோக்கியன்று, முலையென்னுஞ் சாதியை நோக்கி. துடியிடையை யுடைய மான்மடநோக்கி என்னாற்ற லகற்றியது மஞ்ஞை பாம்பைப் பிடித்துப் படத்தைக் கிழித்தாற்போலுமெனக் கூட்டியுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அழுகை. பயன்: பாங்கற் குணர்த்துதல்.

2.4  வெற்பனைத்தன் மெய்ப்பாங்கன்
    கற்பனையிற் கழறியது.


   
இதன் பொருள்: உளம் ஆம் வகை உய்ய வந்து நம்மை ஆண்டு-உளமாயும் இலமாயும் மாறிவாராது நாமொருபடியே உளமாம் வண்ணம் பிறவித் துன்பத்திற் பிழைக்கத் தான்வந்து நம்மையாண்டு; உம்பர் சென்று உய்ய-உம்பரெல்லாந் தன்கட்சென்று பிழைக்க; களம்