வளம
பாங்கற் கூட்டம்
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
நின்றொர்வஞ்
சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம்
மண்ண லிரங்கியதே.
22
2.5 கழற்றெதிர்மறுத்தல்
கழற்றெதிர்மறுத்தல் என்பது
காதற்பாங்கன் கழறவும் கேளானாய்ப் பின்னும் வேட்கைவயத்தனாய்நின்று, என்னாற் காணப்பட்ட
வடிவை நீ கண்டிலை; கண்டனையாயிற்
கழறாயென்று அவனொடு மறுத்துரைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-
23. சேணிற் பொலிசெம்பொன்
மாளிகைத்
தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
கயிலை மயிலைமன்னும்
_____________________________________________________________
ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை
தொல்லோன் கயிலை-மிடற்றின்கணுளதாகு நஞ்சை யமிர்தமாக்கிய தில்லைக் கணுளனாகிய பழையோனது கயிலையில்;
வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற-வளவிய மாஞ்சோலைக்கண் வருத்துவதென்றறியாமல் நின்று; வஞ்சி
மருங்குல் ஓர் இளமான் விழித்தது என்றோ எம் அண்ணல் இன்று இரங்கியது-வஞ்சிபோலு மருங்குலையுடைய
தோரிளமான் விழித்ததென்றோ எம்மண்ணல் இன்றிரங்கியது! இது நின்பெருமைக்குத் தகாது எ-று. நம்மையென்றது
தம்மைப் போல் வாரை. களமார்விட மென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு; எள்ளல்பற்றி வந்த நகை.
என்னை,
எள்ள லிளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப
- தொல்.
பொருள். மெய்ப்பட்டியல்-4
என்றாராகலின். பயன்: கழறுதல்.
22
2.5.
ஆங்குயி ரன்ன பாங்கன்
கழற
வளந்தரு வெற்ப னுளந்தளர்ந்
துரைத்தது.
இதன் பொருள் : சேணில்
பொலி செம்பொன் மாளிகை தில்லைச் சிற்றம்பலத்து-சேய்மைக்கண் விளங்கித் தோன்றாநின்ற
செம்பொனா
|