பூண
பாங்கற் கூட்டம்
பூணிற் பொலிகொங்கை
யாவியை
யோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை
மென்றோட் கரும்பினையே.
23
______________________________________________________________
னியன்ற மாளிகையையுடைய தில்லைச்
சிற்றம்பலத்தின்கணுள னாகிய; மாணிக்கம் கூத்தன் வடவான் கயிலை மயிலை- மாணிக்கம்
போலுங் கூத்தனது வடக்கின்கணுண்டாகிய பெரிய கயிலைக்கண் வாழுமயிலை; மன்னும் பூணின் பொலி
கொங்கை ஆவியை-பொருந்திய பூண்களாற் பொலிகின்ற கொங்கையையுடைய என்னுயிரை ;
ஓவியம் பொன் கொழுந்தை காணின் கழறலை-ஓவியமாகிய பொற்கொழுந்தைக் கண்டனையாயிற் கழறாய்;
மென்தோள் கரும்பினை கண்டிலை - மென்றோளையுடைய கரும்பைக் கண்டிலை எ-று.
மாணிக்கக்கூத்தன் என்புழி மாணிக்கத்தைக்
கூத்திற் குவமையாக வுரைப்பினுமமையும், பொற்கொழுந்து-பொன்னை வண்ணமாகக் கொண்டெழுதிய கொழுந்து.
மென்றோட் கரும்பினை யென்பதற்கு மெல்லிய தோளிலெழுதிய கரும்பையுடையாளை யெனினுமமையும்.
மெய்ப்பாடு: அழுகையைச்சார்ந்து
வருத்தம் பற்றிவந்த விளிவரல். என்னை,
மூப்பே பிணியே வருத்த மென்மையோ
டியாப்புற வந்த விளிவர னான்கே
- தொல்.
பொருள். மெய்ப்பாட்டியல்-6
என்றாராகலின். பயன்: பாங்கனை
யுடம்படுவித்தல். பாங்கன் கழறவும் இவ்வகை மறுத்துரைத்தானென்பது.
23
|