2
பாங்கற் கூட்டம்
2.6 கவன்றுரைத்தல்
கவன்றுரைத்தல் என்பது மறுத்துரைத்து
வருந்தாநிற்பக் கண்ட பாங்கன் ஒருகாலத்துங் கலங்காதவுள்ளம் இவ்வாறு கலங்குதற்குக் காரணமென்னோவெனத்
தலைவனுடன் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
24. லிலங்கலைக் கால்விண்டு
மேன்மே
லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற்
றம்பலத்
தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென்
னோவள்ள
லுள்ளந் துயர்கின்றதே.
24
______________________________________________________________
2.6. கொலைக்களிற் றண்ணல்
குறைநயந் துரைப்பக்
கலக்கஞ்செய் பாங்கன்
கவன்று ரைத்தது.
இதன் பொருள்: விலங்கலை
கால் விண்டு மேன்மேல் இட-மலைகளைக் காற்றுப்பிளந்து மேலுமேலுமிட; விண்ணும் மண்ணும் முந்நீர்
கலங்கலை சென்ற அன்றும் கலங்காய்-வானுலகும் மண்ணுலகும் முந்நீராற் கலங்குதலையடைந்த விடத்துங்
கலங்குந் தன்மையை யல்லை; கமழ் கொன்றை துன்றும் அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள்
இல்லவர் போல் துலங்கலை சென்று-கமழாநின்ற கொன்றைப்பூ நெருங்கிய மாலையை முடிமாலையாகச்
சுற்றிய சிற்றம்பலத்தானது அருளையுடையரல்லதாரைப் போலத் துளங்குதலையடைந்து; வள்ளல் உள்ளம்;
துயர்கின்றது இது என்னோ-வள்ளலே, நினதுள்ளந் துயர்கின்றது இஃதென்னோ! எ-று.
விண்டென்பது பிளந்தென்பது
போலச் செய்வதன் றொழிற்குஞ் செய்விப்பதன்றொழிற்கும் பொது. இவனது கலக்கத்திற்குக் காரணமாய்
அதற்கு முன்னிகழ்தனோக்கிச் சென்ற வன்றுமென இறந்தகாலத்தாற் கூறினான். வள்ளலென்பது :
ஈண்டு முன்னிலைக் கண்வந்தது. இதென்னோவென்பது வினாவுதல் கருதாது அவனது கவற்சியை விளக்கிநின்றது.
கலக்கஞ் செய்பாங்கன்-கலங்கிய பாங்கன்; தலைமகனைக் கலக்கிய பாங்கனெனினுமமையும், மெய்ப்
|