பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
157

2

பாங்கற் கூட்டம்

2.7 வலியழிவுரைத்தல்

   
வலியழிவுரைத்தல் என்பது பாங்கன் கவன்றுரையா நிற்ப, முன்பு இத்தன்மையேனாகிய யான் இன்று ஒருசிறுமான் விழிக்கு இவ்வாறாயினேனெனத் தலைமகன் தன் வலியழிந்தமை கூறி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள் -

25. தலைப்படு சால்பினுக் குந்தள
       ரேன்சித்தம் பித்தனென்று
   மலைத்தறி வாரில்லை யாரையுந்
       தேற்றுவ னெத்துணையுங்

_____________________________________________________________

பாடு: இளிவரல், பயன்: கழறுதல், மேற்பொது  வகையாற் கழறினான், ஈண்டு விசேடவகையாற் கழறினானென்பது.

24

2.7.  நிறைபொறை தேற்றம் நீதயொடு சால்பு
     மறியுறு நோக்கிற்கு வாடினே னென்றது.


இதன் பொருள்: தலைப்படு சால்பினுக்கும் தளரேன்-முன் தலைமையாய அமைதியானு முள்ளந் தளரேன்; சித்தம் பித்தன் என்று மலைத்து அறிவார் இல்லை-பிறழவுணர்ந்தாயென்று மாறுபட்டறிவாருமில்லை; யாரையும் எத்துணையும் தேற்றுவன்-பிறழவுணர்ந்தார் யாவரையும் மிகவுந் தெளிவியாநிற்பேன்; கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினன்-இப்பொழுது ஒரு கலையாகிய சிறிய பிறையைச் சூடிய சிற்றம்பலவனது கயிலைமலைக்கணுண்டாகிய சிறுமானினது விழியால் அழிந்து மயங்கினேன் எ-று.

   
சால்பழிந்துள்ளந்தளரேனென்பான் சால்பினுக்குந் தளரேனென்றான். தலைப்படு சால்பென்பதற்கு எல்லாப் பொருளுஞ் சிவனைத்தலைப்பட்டுச் சென்றொடுங்கும் ஊழியிறுதி யென்றுரைப் பினுமமையும், நிறையும் பொறையுஞ் சால்பும் தலைப்படும் சால்பென்றதனாற்பெற்றாம். பித்தனென்று மலைத்தறி வாரில்லை யென்றதனால் தேற்றம் பெற்றாம். யாரையுந் தேற்றுவனென்றதனால் நீதிபெற்றாம், கலங்கினாரைத் தெளிவித்தல் நீதியாகலான். ஈண்டுத்தன்னை யுயர்த்தலென்னுங் குற்றந்தங்காது, சால்பு முதலாயினவற்றை இப்பொழுதுடையே னென்னாமையின், சால்பு “அன்புநானொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ-டைந்துசால் பூன்றிய