|
க
பாங்கற் கூட்டம்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி
வுற்று மயங்கினனே.
25
2.8 விதியொடுவெறுத்தல்
விதியொடுவெறுத்தல் என்பது வலியழிந்தமைகூறி
வருந்தா நின்ற தலைமகன் பாங்கனொடுபுலந்து வெள்கி, யான் செய்த நல்வினையும் வந்து பயன்றந்ததில்லையெனத்
தன் விதியொடு வெறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
26. நல்வினை யும்நயந் தந்தின்று
வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன
கோங்கரும்
பாமென்று பாங்கன்சொல்ல
______________________________________________________________
தூண்” (குறள் - 983) என்பத நானறிக.
நோக்கிற்கு - நோக்கினால், மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றமையுணர்த்தல். இதுவும் மேலதேபோல
மறுத்துரைத்தானென்பது.
25
2.8. கல்விமிகு பாங்கன் கழற
வெள்கிச்
செல்வமிகு சிலம்பன் தெரிந்து
செப்பியது.
இதன்பொருள்: கொல்
வினை வல்லன நடுங்கு மின் மேல் கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல-கொல்லுந் தொழிலை
வல்லன நடுங்கு மின் மேலுண்டாகிய கோங்கரும்புகளாமென்று யான் பற்றுக்கோடாக நினைந்திருந்த
பாங்கன்றானே இகழ்ந்து சொல்லுதலால்; வெள்கி தொல் வினையால் துயரும் எனது ஆர் உயிர் துப்புற
- நாணிப் பழையதாகிய தீவினையாற்றுயருறாநின்ற எனது அரியவுயிர் வலியுறும்வண்ணம்; நல்வினையும்
வந்து நயம் தந்தின்று-யான் உம்மைச்செய்த நல்வினையும் வந்து பயன்றந்ததில்லை எ-று. வில்
வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி-வில்லின்றொழிலினை மேருவின்கண் வைத்தவனது
தில்லை தொழாதாரைப்போல வெள்கி யெனக்கூட்டுக.
உம்மை: எச்சவும்மை, கல்வியேயுமன்றி
யென்றவாறு. நல்வினை தீவினையைச் கெடுக்குமாயினும் யான்செய்த நல்வினை அது செய்ததில்லையென்பது
கருத்து. நாணினார் மேனி வெள்கு
|