பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
159

பாங்கற் கூட்டம்   

 வில்வினை மேருவில் வைத்தவன்
        தில்லை தொழாரின்வெள்கித்
    தொல்வினை யாற்றுய ரும்மென
        தாருயிர் துப்புறவே.

26

2.9 பாங்கனொந்துரைத்தல்

   
பாங்கனொந்துரைத்தல் என்பது விதியொடுவெறுத்து வருந்தாநிற்பக் கண்டபாங்கன், அமிர்தமும் மழையும் தங்குணங்கெடினும் நின்குணங்கெடாதநீ ஒருத்தி காரணமாக நின்சீலத்தை நினையாதவாறு இவ்வாறாகியது எனது தீவினையின் பயனாம் இத்தனையன்றோவெனத் தானும் அவனோடுகூட வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள்-

27. ஆலத்தி னாலமிர் தாக்கிய
      கோன்தில்லை யம்பலம்போற்
   கோலத்தி னாள் பொருட்டாக
      வமிர்தங் குணங்கெடினுங்

______________________________________________________________

தலான் வெள்கியென்றான். துப்புறவென்னுமெச்சம் தந்தின்றென்பதில் தருதலென்பதனோடு முடிந்தது. துப்புறத் துயருமென்றியைத்து மிகவுந் துயரமென முற்றாகவுரைப்பினுமமையும். நல்வினையுந் நயந்தந்ததென்பது பாடமாயின், குறிப்பு நிலையாகக் கொள்க. மெய்ப்பாடுபயனும்: அவை.

26

2.9.  இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி
     நின்னது தன்மை நினைந்திலை யென்றது.

   
இதன் பொருள்: ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம்போற் கோலத்தினாள் பொருட்டு ஆக - நஞ்சால் அமிர்தத்தையுண்டாக்கிய இறைவனது தில்லையம்பலம்போலும் அழகையுடையாளொருத்தி காரணமாக; அமிர்தம் குணம் கெடினும் காலத்தினான் மழை மாறினும்-அமிர்தம் தன்குணங்கெடினும் பெய்யுங் காலத்து மழை பெய்யாது மாறினும்; மாறாக் கவி கை நின்பொன் சீலத்தை-மாறாதவண்மையை உடைய நினது பொன் போலப் பெறுதற்கரிய ஒழுக்கத்தை; நீயும்-அறிவதறிந்த நீயும்; நினையாது ஒழிவது என் தீவினை-அறியா தொழிகின்றது எனது தீவினைப் பயன் எ-று.