பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
160

பாங்கற் கூட்டம்

காலத்தி னான்மழை மாறினும்
        மாறாக் கவிகைநின்பொற்
    சீலத்தை நீயும் நினையா
       தொழிவதென் தீவினையே.

27


2.10 இயலிடங்கேட்டல்

   
இயலிடங்கேட்டல் என்பது தலைமகனுடன்கூட வருந்தா நின்ற பாங்கன் யானும் இவனுடன்கூட வருந்தினால் இவனை ஆற்றுவிப்பாரில்லையென அது பற்றுக்கோடாகத் தானாற்றி நின்று, அது கிடக்க, நின்னாற்காணப்பட்ட வடிவுக்கு இயல் யாது? இடம் யாது? கூறுவாயாகவென அவளுடைய இயலும் இடமுங் கேளாநிற்றல், அதற்குச் செய்யுள்-

28. நின்னுடை நீர்மையும் நீயு
      மிவ்வாறு நினைத்தெருட்டும்
   என்னுடை நீர்மையி தென்னென்ப
      தேதில்லை யேர்கொண்முக்கண்

_________________________________________________

    நஞ்சின்றன்மையொழித்து அமிர்தஞ்செய்யுங் காரியத்தைச் செய்தலின், அமிர்தாக்கியவென்றார். ஆலத்தினாலென்று மூன்றாவது பாலாற்றாயிராக்கிய வென்பது போல நின்றது. நஞ்சினாலோர் போனகத்தையுண்டாக்கிய வெனினுமமையும். அம்பலம் போலு மென்னு முவமை பட்டாங்கு சொல்லுதற்கண் வந்தது; புகழ்தற்கண் வந்ததென்பார் அம்பலம்போற் கோலத்தினாள் பொருட்டே யாயினுமாகவென முற்றாகவுரைப்ப. மாறாக்கவிகையென வண்மை மிகுத்துக்கூறினான், தானு மொன்றிரக்கின்றானாகலின். மாறாக் கவிதைநீயுமெனக் கூட்டினுமமையும், மெய்ப்பாடு:  இளிவரல். பயன்:  தலைமகனைத் தெருட்டல்.

27

2.10. கமழு லெய்திய காதற் றோழன்
    செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது.


   
இதன் பொருள்நின்னுடைய நீர்மையும் இவ்வாறு-நின்னுடைய வியல்பாகிய குணமும் இவ்வாறாயிற்று; நீயும் இவ்வாறு ஒருகாலத்துங் கலங்காத நீயும் இத்தன்மையையாயினாய்-நினைத் தெருட்டும் என்னுடைய நீர்மையிது என் என்பதே; இனி நின்னைத் தெளிவிக்கும் என்னுடையவியல்பு யாதென்று சொல்வதோ! அது கிடக்க; சிலம்பா; நின்னை இன்னே செய்த ஈர்ங் கொடிக்கு-