பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
161

மன

பாங்கற் கூட்டம்

    மன்னுடை மால்வரை யோமல
        ரோவிசும் போசிலம்பா
    என்னிடம் யாதியல் நின்னையின்
        னேசெய்த ஈர்ங்கொடிக்கே.

28

2.11 இயலிடங்கூறல்

   
இயலிடங்கூறல் என்பது இயலிடங்கேட்ட பாங்கனுக்குத் தான் அவளை யெய்தினாற் போலப் பெரியதோராற்று தலையுடையனாய் நின்று, என்னாற் காணப்பட்ட வடிவுக்கு இயல் இவை; இடம் இது; என்று இயலும் இடமுங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

29. விழியாற் பிணையாம் விளங்கிய
      லான்மயி லாம்மிழற்று
   மொழியாற் கிளியாம் முதுவா
      னவர்தம் முடித்தொகைகள்

______________________________________________________________

நின்னை யித்தன்மையையாகச் செய்த இனியகொடிக்கு; தில்லை ஏர் கொள் முக்கண் மன்னுடை மால்வரையோ மலரோ விசும்போ இடம் என் இயல் யாது-தில்லைக்கணுளனாகிய அழகு பொருந்திய மூன்று கண்ணையுடைய மன்னனது பெரிய கயிலை மலையோ தாமரைப் பூவோ வானோ இடம் யாது? இயல் யாது? கூறுவாயாக எ-று.

    என்னென்பதேயென்னும் ஏகாரம்: வினா; அசைநிலை யெனினுமமையும். பிறர்கண்போலாது மூன்றாயிருந்தனவாயினும் அவைதாம் ஓரழகுடையவென்னுங் கருத்தால், ஏர்கொண்முக்கணென்றார். கழுமல் - மயக்கம். மெய்ப்பாடு: அச்சம். பயன்: தலைமகனை யாற்றுவித்தல்.

28

2.11.  அழுங்க லெய்திய ஆருயிர்ப் பாங்கற்குச்
     செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.

   
இதன் பொருள்: முது வானவர் தம் முடித் தொகைகள் கழியாக் கழல் -தலைவராகிய இந்திரன் முதலாகிய தேவர்களுடைய முடித்திரள்கள் நீங்காத கழலையுடைய; தில்லைக் கூத்தன் கயிலை-தில்லைக் கூத்தனது கயிலைமலையிடத்து; முத்தம் மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வம்-முத்துக்களைப் பெருந்தேன் கொழித்து விளங்கும் பொழிற்கு