பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
162

கழ

பாங்கற் கூட்டம்

    கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
        கயிலைமுத் தம்மலைத்தேன் 
    கொழியாத் திகழும் பொழிற்கெழி
        லாமெங் குலதெய்வமே.

29

2.12 வற்புறுத்தல்

   
வற்புறுத்தல் என்பது இயலிடங்கூறக் கேட்ட பாங்கன் நீ சொன்ன கயிலையிடத்தே சென்று இப்பெற்றியாளைக்கண்டு இப்பொழுதே வருவன்; அவ்வளவும் நீ யாற்றுவாயாதல் வேண்டுமெனத் தலைமகனை வற்புறுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

30. குயிலைச் சிலம்படிக் கொம்பினைக்
        தில்லையெங் கூத்தப்பிரான்
   கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங்
        காக்குங் கருங்கட்செவ்வாய்

______________________________________________________________

அழகாம் எம்முடைய நல்லதெய்வம்; விழியான்பிணை ஆம் - விழிகளாற் பிணையாம்; விளங்கு இயலான் மயில் ஆம் - விளங்கா நின்ற இயலான் மயிலாம் - மிழற்று மொழியான் கிளியாம் - கொஞ்சு மொழியாற் கிளியாம் எ - று.

    இயல் இன்னவென்றும் இடம் கயிலைப் பொழிலென்றுங் கூறப்பட்டனவாம். முத்தம் - யானைக்கோட்டினும், வேயினும் பிறந்த முத்து. அழுங்கல் - இரக்கம். செழுமை - வளமை. மெய்ப்பாடு;  உவகை. பாயன்: பாங்கற் குணர்த்தல்.

29

2.12.  பெயர்ந்து ரைத்த பெருவரை நாடனை
     வயங்கெழு புகழோன் வற்புறுத் தியது.


    இதன் பொருள் : சிலம்ப - சிலம்பனே; குயிலை - குயிலை; சிலம்பு அடிக் கொம்பினை - சிலம்படியையுடையதோர் கொம்பை; தில்லை எம் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பில் பைம் பூம்புனம் காக்கும் கரும் கண் செவ்வாய் மயிலை -தில்லைக்கணுளனாகிய எம்முடைய கூத்தப்பிரானது கயிலையாகிய சிலம்பின்கட் பைம்பூம் புனத்தைக் காக்குங் கரிய கண்ணையுஞ் சிவந்த வாயையுமுடையதோர் மயிலை; வண் பூங் கொடிகள் பயிலச் சிலம்பு எதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கு அறை யான் போய் - வனவிய பூவை உடைய