பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
163

மய

பாங்கற் கூட்டம்

    மயிலைச் சிலம்பகண்டி யான்போய்
        வருவன்வண் பூங்கொடிகள்
 
    பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
        நண்ணும் பளிக்கறையே.

31

2.13 குறிவழிச்சேறல்

   
குறிவழிச்சேறல் என்பது தலைமகனை வற்புறுத்தி அவன் குறிவழிச் செல்லாநின்ற பாங்கன் இத்தன்மையானை யான் அவ்விடத்துக்காணலாங் கொல்லோவென அந்நினைவோடு செல்லா நிற்றல். அதற்குச் செய்யுள்-

31. கொடுங்கால் குலவரை யேழேழ்
        பொழிலொழில் குன்றுமன்று
   நடுங்கா தவனை நடுங்க
        நுடங்கு நடுவுடைய

_____________________________________________________________

கொடிகள் போலும் ஆயத்தார் நெருங்க அவரோடு சிலம்பிற் கெதிர் கூவித்தான் விளையாட்டைப் பொருந்தும் பளிக்கறைக்கண் யான் சென்று; கண்டு வருவன்-கண்டு வருவேன்; நீ யாற்றுவாயாக எ-று.

    கூத்தப்பிரான் என்பது கூத்தனாயினும் பிரானாயுள்ளான் என்றவாறு. பெயர்ந்துரைத்தல் - கழறமறுத்துரைத்தல்; ஆற்றாத் தன்மையனாய்ப் பெயர்ந்து இயலும் இடனுங் கூறியவெனினுமமையும். வயவென்னுமுரிச்சொல் விகார வகையால் வயமென நின்றது. சிறுபான்மை மெல்லெழுத்துப் பெற்றதெனினுமமையும் கெழு: சாரியை. மெய்ப்பாடு: பெருமிதம் பயன்: வற்புறுத்தல்.

30

2.13.  அறைகழ லண்ணல் அருளின வழியே
      நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது. 


   
இதன் பொருள்: கொடுங் கால் குலவரை ஏழு ஏழ்பொழில் எழில் குன்றும்  அன்றும் நடுங்காதவனை-கொடியகாற்றாற் குலமலைகளேழும் பொழிலேழும்  அழகுகெடும் ஊழியிறுதியாகிய அன்றும் நடுங்காதவனை; நடுங்க நுடங்கும் நடு உடைய விடம் கால் அயிற்கண்ணி-நடுங்குவிக்கும் இடையையுடைய நஞ்சைக் காலும் வேல் போலுங் கண்ணையுடையாள்; தில்லை ஈசன் வெற்பில் தடம் கார் தரு பெருவான் பொழில் நீழல் தண் புனத்து மேவும் கொலாம்-தில்லைக்கணுளனாகிய ஈசனது வெற்பிடத்துப் பெரிய முகில்போலும்