பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
165

பாங்கற் கூட்டம்

    அடிச்சந்த மாமல ரண்ணல்விண் 
        ணோர்வணங் கம்பலம்போற்
    படிச்சந் தமுமிது வேயிவ
        ளேஅப் பணிமொழியே.

32

2.15 தலைவனை வியந்துரைத்தல்

   
தலைவனை வயிந்துரைத்தல் என்பது குறிவழிக்கண்ட பாங்கன் இவ்வுறுப்புக்களையுடைய இவளைக்கண்டு பிரிந்து இங்கு நின்று அங்குவந்து யான்கழறவும் ஆற்றி அத்தனையுந் தப்பாமற் சொன்ன அண்ணலே திண்ணியானெனத் தலைமகனை வியந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

33. குவளைக் களத்தம் பலவன்
      குரைகழல் போற்கமலத்
   தவளைப் பயங்கர மாகநின்
      றாண்ட அவயவத்தின்

______________________________________________________________

படிச்சந்தமும் இதுவே - ஒருணவுர்விமில்லாதயானும் பற்றிவிட மாட்டாத அடியாகிய சந்த மாமலரையுடைய தலைவனது விண்ணோர் வந்து வணங்கும் அம்பலம்போலும் ஒப்பும் இதுவே;  அப்பணி மொழி இவளே-அப்பணிமொழியும் இவளே! எ - று.

   
வெற்பன் சொற்பரிசே யென்றது இதனையவன் தப்பாமற் கூறியவாறென்னை என்றவாறு. வடியென்பது வடுவகிருக்கோர் பெயர். அதரத்திற்குத் துடித்தல் இயல்பாகக் கூறப. பவளந் துடிக்கின்றவா என்பதற்குப் பவளம்போலப்  பாடம் செய்கின்றவாறு என்னென் றுரைப்பாருமுளர். படிச்சந்தமென்பது வடமொழித்திரிபு. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தெளிதல்.

32

2.15.  நயந்த வுருவும் நலனுங் கண்டு
     வியந்த வனையே மிகுத்து ரைத்தது.

   
இதன் பொருள்:  குவளைக் களத்து அம்பலவன் குரை கழல் போற் கமலத்தவளை-குவளைப்பூப்போலுந் திருமிடற்றையுடைய அம்பலவனுடைய ஒலிக்குங் கழலையுடைய திருவடிபோலுந் தாமரைப் பூவிலிருக்குந் திருமகளை;  பயங்கரம் ஆக நின்று ஆண்ட அவயவத்தின் இவளைக் கண்டு இங்குநின்று அங்கு வந்து-தாமவட்குப் பயத்தைச் செய்வனவாக நின்று அடிமை கொண்ட