பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
166

இவ

பாங்கற் கூட்டம்

    இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
        தத்துணை யும்பகர்ந்த
    கவளக் களிற்றண்ண லேதிண்ணி
        யானிக் கடலிடத்தே.

33

2.16 கண்டமைகூறல்

   
கண்டமை கூறல் என்பது தலைமகனை வியந்துரைத்த பாங்கன் விரைந்து சென்று, தான் அவளைக் கண்டமை தலை மகனுக்குப் பிடிமிசைவைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

34. பணந்தா ழரவரைச் சிற்றம்
      பலவர்பைம் பொற்கயிலைப்
   புணர்ந்தாங் ககன்ற பொருகரி
      யுன்னிப் புனத்தயலே

_____________________________________________________________

உறுப்புக்களையுடைய இவளைக்கண்டு பிரிந்து இங்குநின்றும் அவ்விடத்து வந்து; அத்துணையும் பகர்ந்த கவளக் களிற்று அண்ணலே இக்கடலிடத்துத் திண்ணியான் - யான் கழறவும் ஆற்றி அவ்வளவெல்லாங்கூறிய கவளக்களிற்றையுடைய அண்ணலே இவ்வுலகத்துத் திண்ணியான் எ - று.

    இவளைக் கண்டென்றது இவளுடைய நலத்தைக் கொண்டாடியவாறன்று, முன்னங்கே தலைவனுடைய பொலிவழிவு கண்டு இங்கே வந்தவன் இங்கு மிவளுடைய பொலிவழிவுகண்டு கிலேசித்து இவளித்ததன்மையளாக இங்கே இவளைப்பிரிந்து அங்கே வந்து அத்துணையும் பகர்ந்தவனே திண்ணியானென்று இருவருடைய அனுராகமுங் கூறியவாறு. கவளக்களிறு-தான் விரும்புங் கவளம்பெற்று வளர்ந்த களிறு. நயந்த-தலைமகனயந்த, மெய்ப்பாடு: மருட்கையைச்சார்ந்த அச்சம். பயன்: தலைமகனை வியத்தல்.    33

2.16.  பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை
     அடுதிற லண்ணற் கறிய வுரைத்தது.

   
இதன் பொருள் வாய் நிணம் தாழ் சுடர் இலை வேல - வாய்க் கணிணந்தங்கிய சுடரிலைவேலை யுடையாய்; பணம் தாழ் அரவு அரைச் சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை - பணந்தாழ்ந்த அரவை யணிந்த அரையையுடைய சிற்றம்பலவரது பசும்பொன்னையுடைய கயிலைக்கண்; புணர்ந்து ஆங்கு அகன்ற பொருகரி உன்னி - கூடி