பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
178

2

பாங்கற் கூட்டம்

2.27 மருங்கணைதல்

   
மருங்கணைதல் என்பது தலைமகள் நாணிழந்து வருந்தா நிற்பச் சென்று சார்தலாகாமையின், தலைமகன் தன்னாதரவினால் அவ்வருத்தந்தணிப்பான் போன்று முலையொடுமுனிந்து, ஒரு கையால் இறுமருங்குறாங்கியும், ஒருகையால் அளிகுலம் விலக்கி அளகந்தொட்டும், சென்று அணையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

45. கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
      கஃதே குறைப்பவர்தஞ்
   சீலத் தனகொங்கை தேற்றகி
      லேஞ்சிவன் தில்லையன்னாள்

__________________________________________________

2.27.  ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம் விலக்கிக்
      கருங்களிற் றண்ணல் மருங்க ணைந்தது.


   
இதன் பொருள் :  கோலத் தனிக் கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர் தம் சீலத்தன கொங்கை - அழகையுடைய தனியாகிய கொம்பின்மேலேறி அதனையே அடிக்கட் குறைப்பார் தமது தன்மையையுடையவாயிருந்தன கொங்கைகள்; தேற்றகிலேம் - இவை இத்தன்மையவாயிருத்தலான் இது வாழுமென்றியாந் தெளிகின்றிலம், அதனால் - வண்டுகாள் - வண்டுகாள்; சிவன் தில்லை அன்னாள் நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது - சிவனது தில்லையை யொப்பாளுடைய நுலை யொத்த நேரிய விடையினது நொய்ம்மையைக் கருதாது; நுண் தேன் நசையால் கொண்டை சார்வது சாலத்தகாது - நுண்ணிய தேன்மேலுண்டாகிய நசையால் நீயிர்கொண்டையைச்சார்தல் மிகவுந் தகாது எ-று.

   
தேற்றகிலேமென்பது “தேற்றாப் புன்சொ னோற்றிசின்” (புறம் - 202) என்பதுபோலத் தெளிதற்கண் வந்தது. முலைகளைத் தெளிவிக்க மாட்டேமென்பாருமுளர். பின்வருமேதத்தை நோக்கின் நீயிர் பயனாக நினைக்கின்ற இஃது இறப்பச்சிறிதென்னுங் கருத்தால், நுண்டேனென்றான். கண்டீரென்பது: முன்னிலையசைச்சொல். அளிகுலம்: வடமொழிமுடிபு. விலக்கியணைந்தது - விலக்கா நின்றணைந்தது. மெய்ப்பாடு: உவகை. பயன்: சார்தல். அவ்வகை நின்றமை குறிப்பினானுணர்ந்த தலைமகன் இவ்வகை சொல்லிச் சார்ந்தானென்பது.

45