பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
179

New Page 1

பாங்கற் கூட்டம்

    நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
        ணாதுநுண் தேன்நசையாற்
    சாலத் தகாதுகண்டீர்வண்டு
        காள்கொண்டை சார்வதுவே.

45

2.28 இன்றியமையாமைகூறல்

   
இன்றியமையாமை கூறல் என்பது புணர்ச்சி யிறுதிக்கண் விசும்பும் நிலனும் ஒருங்குபெற வரினும் இக்கொங்கைகளை மறந்து அதன்கண் முயலேனெனப் பிரிவுதோன்றத் தலைமகன் தனது இன்றியமையாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

46. நீங்கரும் பொற்கழற் சிற்றம்
      பலவர் நெடுவிசும்பும்
   வாங்கிருந் தெண்கடல்வையமு
      மெய்தினும் யான்மறவேன்

____________________________________________________________

2.28.   வென்றி வேலவன் மெல்லி யல்தனக்
       கின்றி யமையாமை யெடுத்து ரைத்தது. 

இதன் பொருள்:  நீங்கரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடு விசும்பும் வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் - விடுதற்கரிய பொன்னானியன்ற கழலையுடைத்தாகிய திருவடியையுடைய சிற்றம்பலவரது நெடிதாகிய தேவருலகையும் வளைந்த பெரிய தெண்கடலாற் சூழப்பட்ட நிலத்தையும் ஒருங்கு பெற வரினும்; தீம் கரும்பும் அமிழ்தும் செழு தேனும் பொதிந்து - இனிய கரும்பின் சாற்றையும் அமிர்தத்தையும் கொழுவிய தேனையும் உள்ளடக்கி; செப்பும் கோங்கு அரும்பும் தொலைத்து-செம்பையுங் கோங் கரும்பையும் வென்று; என்னையும் ஆட்கொண்ட கொங்கைகள்-என்னையும் அடிமைகொண்ட கொங்கைகளை; யான் மறவேன்-யான் மறவேன் எ-று.

   
விசும்பும் நிலனும் ஒருங்குபெற வரினும் இக்கொங்கைகளை மறந்து அதன்கண் முயலுமாறில்லையெனத் தன்னின்றியமையாமை கூறியவா றாயிற்று: என்னையுமென்ற வும்மை எச்சவும்மை. தொழிற்படுத்த லொற்றுமையால் தன்வினை யாயிற்று. மெய்ப்பாடு அது. பயன்: நயப் புணர்த்துதல்.

46