பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
180

பாங்கற் கூட்டம்

    தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
        தேனும் பொதிந்துசெப்புங்
    கோங்கரும் புந்தொலைத் தென்னையு
        மாட்கொண்ட கொங்கைகளே.

46

2.29 ஆயத்துய்த்தல்

   
ஆயத் துய்த்தல் என்பது இன்றியமையாமை கூறிப் பிரியலுறாநின்றவன், இனிப் பலசொல்லி யென்னை? என்னுயிர் நினக்கடிமையாயிற்று; இனிச்சென்று நின்னாயத்திடைச் சேர்வாயாக வெனத் தன் பிரிவின்மை கூறித் தலைமகளை ஆயத்துச் செலுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

47. சூளா மணியும்பர்க் காயவன்
        சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
   காளா யொழிந்ததென்னாருயிர்
        ஆரமிழ் தேயணங்கே

_____________________________________________________________

2.29. தேங்கமழ் சிலம்பன்
      பாங்கிற் கூட்டியது.

இதன் பொருள்: உம்பர்க்குச் சூளாமணி ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு என் ஆர் உயிர் ஆளாயொழிந்தது - வானவர்க்கு முடிமணியாயவனது சூழ்ந்த பொழிலையுடைய தில்லையையொக்கும் நினக்கு எனதாருயிர் அடிமையாயிற்று; பல சொல்லி என்னை - ஆதலாற் பலசொல்லிப் பெறுவதென்! ஆர் அமிழ்தே - நிறைந்த வமிர்தே; அணங்கே-அணங்கே; தோளா மணியே - துளைக்கப்படாத மாணிக்கமே; பிணையே-மான்பிணையே-துன்னும் ஆர் நாள் மலர்ப் பொழில்வாய் எழில் ஆயம் நணுகுக; நீ பலகாலுஞ் சேர்ந்து விளையாடும் நிறைந்த நாண்மலரையுடைய பொழிற்கண் விளையாடும் அழகிய ஆயத்தை இனிச் சேர்வாயாக எ-று.

    அடுக்கிய விளிகளாற் காதற்சிறப்பு விளங்கும், பலசொல்லி யென்னையென்றது உயிர் நினக்கு ஆளாகியபின் வேறுபல சொல்லுதல் பயனில கூறலன்றே யென்றவாறு. சொல்லியென்னும் வினையெச்சத்திற்குப் பெறுவதென ஒருசொல் வருவித்துரைக்கப்