பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
181

New Page 1

பாங்கற் கூட்டம்

    தோளா மணியே பிணையே
        பலசொல்லி யென்னை துன்னும்
    நாளார் மலர்ப்பொழில் வாயெழி
        லாயம் நணுகுகவே.

47

2.30 நின்றுவருந்தல்

   
நின்றுவருந்தல் என்பது தலைமகளை ஆயத்துய்த்துத் தான் அவ்விடத்தே நின்று அப்புனத்தியல்பு கூறித் தலைமகன் பிரிவாற்றாது வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

48. பொய்யுடை யார்க்கரன்போலக
      லும்மகன் றாற்புணரின்
   மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
      போல மிகநணுகும்

_____________________________________________________________

பட்டது. பொழில்வாய் நணுகுகவென இயைப்பினு மமையும், மெய்ப்பாடு; பெருமிதம். பயன்; பிரியலுறுந் தலைமகன் வற்புறுத்தல்.

47

2.30.  பாங்கிற் கூட்டிப் பதிவயிற் பெயர்வோன்
      நீங்கற் கருமை நின்று நினைந்தது.


   
இதன் பொருள் : மை உடை வாள்கண் மணி உடைப் பூண்முலை வாள் நுதல் - மையையுடைய வாள்போலுங் கண்ணையும் மணியையுடைய பூணணிந்த முலையையுமுடைய வாணுதல்; வான் பைஉடை வாள் அரவத்து அல்குல்-பெரிய படத்தை யுடைத்தாகிய ஒளியையுடைய அரவுபோலும் அல்குலையுடையாள்; காக்கும் பூம் பைம்புனம்-அவள் காக்கும் பூக்களையுடைய பசிய புனம்-அகன்றால்; தன்னை யானகன்றால்-பொய் உடையார்க்கு அரன் போல் அகலும்-பொய்யையுடையவர்க்கு அரன்றுன்பத்தைச் செய்து சேயனாமாறுபோல மிக்க துயரத்தைச்செய்து எனக்குச்சேய்த்தாம்; புணரின்-அணைந்தால்; மெய் உடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும் - மெய்யையுடையவர்க்கு  அவனது அம்பலம் பேரின்பத்தைச் செய்து அணித்தாமாறுபோலக் கழியுவகைசெய்து எனக்கு மிகவும் அணித்தாம். ஆதலான் நீங்குதல் பெரிதும் அரிது. எ-று.