பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
183

3

3. இடந்தலைப்பாடு


    பொழிலிடைச் சேற லிடந்தலை சொன்ன
    வழியொடு கூட்டி வகுத்திசி னோரே.

-திருக்கோவைநெறிவிளக்கம்

3.1 பொழிலிடைச் சேறல்

   
பொழிலிடைச்சேறல் என்பது இயற்கைப்புணர்ச்சிய திறுதிக்கட் சென்றெய்துதற்கு அருமை நினைந்து வருந்தாநின்ற தலைமகன் இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடுகூடிய முயற்சியான் வந்ததன்று; தெய்வந்தர வந்தது. இன்னும் அத்தெய்வந் தானே தரும். யாம் அப்பொழிலிடைச் செல்வேமெனத் தன் நெஞ்சொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

49. என்னறி வால்வந்த தன்றிது
        முன்னும்இன்னும்முயன்றால்
   மன்னெறி தந்த திருந்தன்று
        தெய்வம் வருந்தல்நெஞ்சே

______________________________________________________________

    இடந்தலைப்பாடு - இதன் பொருள்: பொழிலிடைச்சேறல் ஒன்றும் இடந்தலைப்பாட்டிற்கே உரியது. இதனையும் மேலைப் பாங்கற் கூட்டம் உணர்த்திய சூத்திரத்தில் “ஈங்கிவைநிற்க இடந்தலைதனக்கும்” எனக் கூறியவாறே மின்னிடைமெலிதல் முதல் நின்று வருந்துதல் ஈறாகக் கூறப்பட்ட கிளவிகளோடு கூட்டி இடந்தலைப் பாடாமென்று வகுத்துரைத்துக் கொள்க. அவை பாங்கற்கூட்டத்திற்கும், இடந்தலைப்பாட்டிற்கும் உரியவாமாறு என்னையெனின், பாங்கற்கூட்டம் நிகழாதாயின்  இடந்தலைப்பாடு நிகழும், இடந்தலைப்பாடு  நிகழாதாயின் பாங்கற்கூட்டம் நிகழும் ஆகலின்.

3.1.  ஐயரிக் கண்ணியை யாடிடத் தேசென்
     றெய்துவன் னெனநினைந் தேந்தல் சென்றது.


   
இதன் பொருள்: இது முன்னும் என்னறிவால் வந்தது அன்று- இப்புணர்ச்சி நெருநலும் என்னறிவோடு கூடிய முயற்சியான் வந்ததன்று; தெய்வந்தர வந்தது - முயன்றால் மன் நெறி தந்தது தெய்வம் இன்னும் இருந்தன்று; இன்னுஞ் சிறிது முயன்றான் மன்னிய