பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
184

இடந்தலைப்பாடு

    மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
        பிரான்வியன் தில்லைமுந்நீர்
 
    பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
        மின்றோய் பொழிலிடத்தே.

49

_______________________________________________________________

நெறியாகிய இவ்வொழுக்கத்தைத் தந்ததாகிய தெய்வம் இன்னும் இருந்தது; அது முடிக்கும், அதனான்; நெஞ்சே - நெஞ்சமே; வருந்தல் - வருந்தாதொழி; மின் எறி செஞ்சடைக் கூத்தப் பிரான் வியன்தில்லை முந்நீர்-மின்னை வெல்கின்ற சிவந்த சடையை உடைய கூத்தப்பிரானது அகன்ற தில்லையைச் சூழ்ந்த கடற்றிரை; பொன் எறிவார் துறைவாய் மின்தோய் பொழிலிடத்துச் சென்றும்-பொன்னைக் கொணர்ந்து எறிகின்ற நெடிய துறையிடத்து மின்னையுடைய  முகிலைத்தோயும்  பொழிற்கட்  செல்லுதும் எ-று.

    இன்னும் இருந்தன்று எனக்கூட்டி முயன்றால் என்னும் வினையெச்சத்திற்கு முடிக்குமென ஒருசொல் வருவித்து உரைக்கப்பட்டது. மின்போலும் நெறித்த சடையெனினும் அமையும். கரையிற் பொன்னைத் திரையெறியும் துறையெனினும் அமையும், இருந்தின்று என்பது பாடமாயின், இருந்தின்றோவென ஓகாரம் வருவித்து இருந்ததில்லையோ என உரைக்க, மெய்ப்பாடு
  பெருமிதம். பயன் : இடந்தலைப்படுதல். (இடத்திலே எதிர்ப்படுதல்; தலைவன் முன்னாட் கூடின இடத்திலே வந்து தலைவியை எதிர்ப்படுதல்)

   
இதற்கு மின்னிடைமெலிதன் முதலாக நின்று வருந்தல் ஈறாக வருங்கிளவி எல்லாம் எடுத்துரைத்துக்கொள்க. என்னை, இவ்விரண்டனுள்ளும் ஒன்றே நிகழுமாகலின்.

49

இடந்தலைப்பாடு முற்றிற்று.