பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
185

4

4. மதியுடம்படுத்தல்

மதியுடம்படுத்தல் வருமாறு: இரண்டனுள் ஒன்றாற் சென்றெய்திய பின்னர்த் தெருண்டுவரைதல் தலை; தெருளானாயின் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதற்றோழியை வழிபட்டுச் சென்றெய்துதல் முறைமையென்ப. வழிபடுமாறு: தெற்றெனத் தன்குறைகூறாது இரந்துவைத்துக் கரந்தமொழியாற் றன்கருத்தறிவித்து அவளை ஐயவுணர்வினளாக்கி அதுவழியாக நின்று தன் குறை கூறுதல்.

சேற றுணிதல் வேழம் வினாதல்
    கலைமான் வழிபதி பெயர்வினா தல்லே
    மொழிபெறா துரைத்தல் கருத்தறி வித்த
    லிடைவி னாதலோ டிவை யீரைந்தும்
    மடவரற் றோழிக்கு மதியுடம் படுத்தல்.

-திருக்கோவைநெறிவிளக்கம்

4.1 பாங்கியிடைச்சேறல்

   
பாங்கியிடைச்சேறல் என்பது இரண்டனுள் ஒன்றாற் சென்றெய்திப் புணர்ந்து நீங்கிய தலைமகன் இனியிவளைச் சென்றெய்துதல் எளிதன்று; யாம் அவள் கண்ணாற் காட்டப்பட்ட காதற்றோழிக்கு நங்குறையுள்ளது சொல்வேமென்று அவளை நோக்கிச் செல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-

50. எளிதன் றினிக்கனி வாய்வல்லி
      புல்ல லெழின்மதிக்கீற்
   றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
      பிரானையுன் னாரினென்கண்
_________________________________________________

    மதியுடம்படுத்தல்-இதன் பொருள்: பாங்கியிடைச் சேறல், குறையுறத் துணிதல், வேழம்வினாதல், கலைமான்வினாதல், வழிவினாதல், பதிவினாதல், பெயர்வினாதல், மொழிபெறாதுகூறல், கருத்தறிவித்தல், இடைவினாதல் என விவை பத்தும் மதியுடம்படுத்தலாம் எ-று. அவற்றுள்-

4.1.  கரந்துறை கிளவியிற் காதற் றோழியை
     இரந்துகுறை யுறுவலென் றேந்தல் சென்றது.


   
இதன் பொருள்: கனி வாய் வல்லி புல்லல் இனி எளிது அன்று-தொண்டைக்கனிபோலும் வாயையுடைய வல்லியைப் புல்லுதல் இனி