New Page 1
மதியுடம் படுத்தல்
தெளிசென்ற வேற்கண் வருவித்த
செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற்
றோழிக்கு
வாழி யறிவிப்பனே.
50
_______________________________________________________________
எளிதன்று, அதனால் - எழில்
மதிக் கீற்று ஒளி சென்ற செம்சடைக் கூத்தப்பிரானை உன்னாரின் - எழிலையுடைய மதியாகிய கீற்றினொளிபரந்த
சிவந்தசடையையுடைய கூத்தப்பிரானை நினையாதாரைப்போல வருந்த; என்கண் தெளி சென்ற வேல் கண்
வருவித்த செல்லல் எல்லாம்-என்னிடத்துத் தெளிதலையடைந்த வேல் போலுங்
கண்கள் வருவித்த இன்னாமை முழுதையும்; அளி சென்ற பூ குழல் தோழிக்குத் தெளிவித்து அறிவிப்பன்
- வண்டடைந்த பூங்குழலையுடைய தோழிக்குக் குறிப்பினாலே தெளிவியாநின்று சொல்லுவேன் எ-று.
இரண்டாவது விகாரவகையாற்றொக்கது; வல்லியது
புல்லலெனினுமமையும். வருந்தவென வொருசொல் வருவித்து உரைக்கப்பட்டது. கண்ணோடாது பிறர்க்குத்
துன்பஞ் செய்தலின், உன்னாதாரைக் கண்ணிற்கு உவமையாகவுரைப்பினு மமையும். செல்லலெல்லாந் தெளிவித்தென்பதற்குச்
செல்லலெல்லா வற்றையு நீக்கிவென்பாருமுளர். வாழி: அசைநிலை. கரந்துறைகிளவி - உள்ளக்
குறிப்புக் கரந்துறைமொழி. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: தோழிக்குணர்த்தி
அவளான் முடிப்பலெனக் கருதி ஆற்றாமை நீங்குதல்.
50
|