4
மதியுடம் படுத்தல்
4.2 குறையுறத்துணிதல்
குறையுறத் துணிதல் என்பது
பாங்கியை நினைந்து செல்லா நின்றவன் தெய்வத்தினருளால் அவ்விருவரும் ஓரிடத்தெதிர் நிற்பக்கண்டு.
இவள் இவட்குச் சிறந்தாள்; இனியென்குறையுள்ளது சொல்லுவேனெனத் தன்குறை கூறத் துணியாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
51. குவளைக் கருங்கட் கொடியே
ரிடையிக்
கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த
சிற்றம்
பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
னேயினிச்
சொல்லுவனே.
51
____________________________________________________________
4.2.
ஓரிடத் தவரை யொருங்கு
கண்டுதன்
பேரிடர் பெருந்தகை பேசத் துணிந்தது.
இதன்
பொருள்: குவளை கருங் கண் கொடி ஏர் இடை இக்
கொடி கடைக்கண்-குவளைப்பூப்போலுங் கரியகண்ணினையுங் கொடியை யொத்த இடையினையுமுடைய இக்கொடியினது
கடைக்கண்; உவளைத் தனது உயிர் என்றது-உவளைத் தன்னுடைய வுயிரென்று சொல்லிற்று, அதனால் ;
தன்னோடு உவமை இல்லாதவளைத் தன் பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல் துவளத்
தலைவந்த இன்னல்-தனக்கொப்பில்லாதவளைத் தன்னொரு கூற்றின்கண் வைத்த சிற்றம்பலத்தானது
அருளையுடைய ரல்லாதாரைப் போல் யான் வருந்தும்வண்ணம் என்னிடத்து வந்த இன்னாமையை; இனி இன்னே
சொல்லுவன் - இவட்கு இனி இப்பொழுதே சொல்லுவேன் எ-று.
கடைக்கணுவளை யுயிரென்றது
எனக்கிவ்விடர் செய்த கடைக்கண் இடர் நீந்தும் வாயிலுந் தானே கூறிற்றென்றவாறு. இன்னேயென்பது
இவர்கூடிய இப்பொழுதே என்றவாறு. இனியென்றது இவளிவட் கின்றியமையாமை யறிந்தபின் னென்பது
|