4
மதியுடம் படுத்தல்
4.3 வேழம்வினாதல்
வேழம் வினாதல் என்பது குறைகூறத்
துணியாநின்றவன் என்குறை யின்னதென்று இவளுக்கு வெளிப்படக் கூறுவேனாயின் இவள் மறுக்கவுங்கூடுமென
உட்கொண்டு, என்குறை இன்னதென்று இவடானேயுணரு மளவும் கரந்தமொழியாற் சில சொல்லிப்பின் குறையுறுவதே
காரியம் என, வேட்டை கருதிச் சென்றானாக அவ்விருவருழைச்சென்று நின்று, தன்காதறோன்ற இவ்விடத்தொரு
மதயானைவரக் கண்டீரோ வென வேழம் வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-
52. இருங்களி யாயின் றியானிறு
மாப்பஇன் பம்பணிவோர்
மருங்களி யாஅன லாடவல்
லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப
வுமிழ்மும்
மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண்
டோவரக் கண்டதுவே.
52
________________________________________________________________
படநின்றது. ஒருங்குகண்டு - ஒருகாலத்துக்
கண்டு. மெய்ப்பாடு; அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்; மதியுடம்படுத்தற் கொருப்படுதல்.
51
4.3.
ஏழைய ரிருவரு மிருந்த செவ்வியுள்
வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.
இதன் பொருள்: பணிவோர்
மருங்கு இரும் களியாய் யான் இன்று இறுமாப்ப இன்பம் அளியா அனல் ஆட வல்லோன் - அடியவரிடத்தே
அவரோடு கூடிப் பெரிய களிப்பை யுடையேனாய் யான் இன்றிறுமாக்கும் வண்ணம் இன்பத்தை யெனக்களித்துத்
தீயாடவல்லோன்; தில்லையான்-தில்லையான்; மலை ஈங்கு - அவனது மலையின் இவ்விடத்து; அளி
ஒருங்கு ஆர்ப்ப-அளி களொருங்கார்ப்ப; உமிழ் மும்மதத்து இரு கோட்டு நீள் கரும் களி ஆர் ஒரு
மதயானை வரக் கண்டது உண்டோ - உமிழப்படா நின்ற மூன்று மதத்தையும் இரண்டு கோட்டையுமுடைய நீண்ட
கரிய களி யார்ந்த ஒருமதயானை வாராநிற்பக் கண்டதுண்டோ? உரைமின் எ-று.
|