பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
189

4

மதியுடம் படுத்தல்

4.4 கலைமான்வினாதல்

   
கலைமான் வினாதல் என்பது வேழம்வினாவி உட்புகுந்த பின்னர், தான் கண்ணாலிடர்ப்பட்டமை தோன்ற நின்று, நும்முடைய கண்கள் போலுங் கணைபொருதலா னுண்டாகிய புண்ணோடு இப்புனத்தின்கண் ஒருகலைமான் வரக் கண்டீரோ வென்று கலைமான் வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

53. கருங்கண் ணனையறி யாமைநின்
        றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
   வருங்கண் ணனையவண் டாடும்
        வளரிள வல்லியன்னீர்


_________________________________________________

    மருங்கிறுமாப்பவெனக் கூடிற்று. அனலாடவென்பது அனலோடாடவென விரியும். ஆர்ப்ப வரவெனக் கூட்டுக. ஆர்ப்பவுமிழுமெனினுமமையும். நீட்சி-விலங்குக்குண்டாகிய நெடுமை. களி - உள்ளச்செருக்கு. மதயானை -மதமிடையறாத யானை.

52

4.4.  சிலைமா னண்ணல்
     கலைமான் வினாயது.


   
இதன் பொருள்: கரும் கண்ணனை அறியாமை நின்றோன் தில்லைக்கார்ப் பொழில் வாய்-கரியமாலை அவனறியாமற் றன்னை யொளித்து நின்றவனது தில்லை வரைப்பி னுண்டாகிய கரிய பொழிலிடத்து; வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இளவல்லி அன்னீர்-புறப்படாநின்ற கள்ளாற் றம்மேனி நனையும் வண்ணம் வண்டுகளாடும் வளராநின்ற இளைய வல்லியை யொப்பீர்; இரும் கண் அனைய கணை பொரு புண் புணர் ஒரு வான் கலை அனையது இப்புனத்தின் மருங்கண் ஈங்கு வந்தது உண்டோ-நும்முடைய பெரிய கண்கள் போலுங் கணைபொருதலாலுண்டாகிய புண்ணைப் புணர்ந்த ஒரு வான் கலை அத்தன்மையது இப்புனத்தின் மருங்கு ஈங்கு வந்ததுண்டோ? எ-று.

   
கண்ணன் என்பது: கரியோனென்னும் பொருளதோர் பாகதச் சிதைவு. அஃது அப்பண்பு குறியாது ஈண்டுப் பெயராய் நின்றமையின், கருங்கண்ணனென்றார். சேற்றிற்பங்கயமென்றாற் போல. அறியாமை நின்றோனென்னுஞ் சொற்கள் ஒருசொன்னீரவாய் ஒளித் தோனென்னும் பொருள்பட்டு, இரண்டாவதற்கு