கலம
மதியுடம் படுத்தல்
கலம்பணி கொண்டிடம் அம்பலங்
கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும்
சீறூர்க்
குரைமின்கள் சென்னெறியே.
54
4.6 பதிவினாதல்
பதி வினாதல் என்பது மாறுபடநின்று
வழி வினாவவும் அதற்கு மறுமொழி கொடாதாரை எதிர்முகமாகநின்று, வழிகூறீராயின் நும்பதி கூறுதல்
பழியன்றே; அது கூறுவீராமினென்று அவர்பதி வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-
55. ஒருங்கட மூவெயி லொற்றைக்
கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
கரியுரித் தோன்கயிலை
______________________________________________________________
அணிகலம் பாம்பாகக் கொண்டு அம்பலத்தை
இடமாகக் கொண்டவன்; கார்க்கயிலைச் சிலம்பு அணி கொண்ட நும் சீறூர்க்குச் செல் நெறி உரைமின்கள்
- அவனது முகில்களையுடைய கயிலைக்கட் சிலம்பழகு பெற்ற நுமது சிறியவூர்க்குச் செல்லு நெறியை
உரைமின் எ-று.
கொண்டுகொடுத்தோனென இயைப்பாருமுளர்.
தனக்குத் தக்க தையலை இடத்து வைத்தானென்றுந் தன்னடியார்க்குத் தகாத என்னை அவர்க்குக் கொடுத்தானென்றும்,
அணிதற்குத் தகாத பாம்பை அணிந்தானென்றும், தனக்குத் தகுமம்பலத்தை இடமாகக் கொண்டானென்றும்
மாறுபாட்டொழுக்கங் கூறியவாறாம். கருத்து வேறறிய-வினாயதற்கு மறுமொழி பெறாது பின்னுமொன்றை
வினவுதலான் இவன்கருத்து வேறென்று தோழியறிய. சின்னெறி யென்று பாடமாயின், சிறியநெறி யென்றுரைக்க.
சின்னெறியென்பது அந்நிலத்துப் பண்பு.
54
4.6. பதியொடு பிறவினாய்
மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலிந்தது.
இதன்
பொருள்: மூவெயில் ஒருங்கு அட ஒற்றைக் கணைகொள் சிற்றம்பலவன் - மூவெயிலையும் ஒருங்கே
அடவேண்டித்
|