இ
மதியுடம் படுத்தல்
இருங்கடம் மூடும் பொழிலெழிற்
கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
யோவிங்கு வாழ்பவர்க்கே.
55
4.7 பெயர்வினாதல்
பெயர் வினாதல் என்பது பதிவினாவவும்
அதற்கொன்றுங் கூறாதாரை, நும்பதிகூறுதல் பழியாயின் அதனையொழிமின்; நும்பெயர் கூறுதல் பழியன்றே,
இதனைக்கூறுவீராமினென்று அவரது பெயர் வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்
56. தாரென்ன வோங்குஞ் சடைமுடி
மேற்றனித் திங்கள்வைத்த
காரென்ன வாருங் கறைமிடற்
றம்பல வன்கயிலை
__________________________________________________
தனியம்பைக் கொண்ட சிற்றம்பலவன்;
கரும் கடம் மூன்று உகு நால்வாய்க் கரி உரித்தோன் - கரிய மதமூன்று மொழுகாநின்ற நான்றவாயையுடைய
கரியையுரித்தவன்; கயிலை இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே
வருங்கள் - அவனது கயிலைக்கட் பெரிய காட்டான் மூடப்படும் பொழிற்கணிற்கின்ற எழிலையுடைய
கொம்பையொப்பீராகிய நீங்கள் இங்கேவாரும்; தம் ஊர் பகர்ந்தால் இங்கு வாழ்பவர்க்குப் பழியோ-தமதூரை
யுரைத்தால் இம்மலைவாழ்வார்க்குப் பழியாமோ? பழியாயின் உரைக்கற் பாலீரல்லீர் எ-று.
இரண்டு மதங் கடத்திற் பிறத்தலிற்
பன்மைபற்றிக் கட மென்றார். கொம்பரன்னீர்களென்பது: முன்னிலைப் பெயர். இன்னே வருங்களென்பது
எதிர்முகமாக்கியவாறு. வாருமென்பது குறுகி நின்றது.
55
4.7.
பேரமைத் தோளியர்
பேர்வி னாயது.
இதன் பொருள்:
ஓங்கும் சடை முடிமேல்
தார் என்னத் தனித் திங்கள் வைத்த - உயர்ந்த சடையானியன்ற முடிமேல் தாராக
|