பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
196

4

மதியுடம் படுத்தல்

4.10 இடைவினாதல்

   
இடைவினாதல் என்பது தழைகாட்டித் தன்கருத்தறிவித்து அது வழியாகநின்று நும்மல்குலும் முலையும் அதிபாரமாயிரா நின்றன; இவை இவ்வாறு நிற்றற்குக்காரணம் யாதோவென்று அவரிடை வினாவாநிற்றல். அதற்குச் செய்யுள்

59. கலைக்கீ ழகலல்குற் பாரம
        தாரங்கண் ணார்ந்திலங்கு
   முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
        றாதன் றிலங்கையர்கோன்

______________________________________________________________

4.10.  வழிபதி பிறவினாய்
      மொழிபல மொழிந்தது.

   
இதன் பொருள்: கலைக் கீழ் அகல் அல்குல் பாரமது - மேகலைக்குக் கீழாகிய அகன்ற வல்குலாகிய பாரமது; ஆரம் கண் ஆர்ந்து இலங்கு முலைக் கீழ்ச் சிறிது இன்றி நிற்றல் முற்றாது - முத்து வடம் கண்ணிற்கு ஆர்ந்திலங்காநின்ற முலையின்கீழ் இடைசிறி தின்றித்தானே நிற்றல் முடிவுபெறாது; அன்று இலங்கையர்கோன் மலைக்கீழ் விழச் செற்ற சிற்றம்பலவர் - இவ்வரையையெடுத்த அன்று இலங்கையர்கோன் இவ்வரைக்கீழ் வீழும்வண்ணஞ் செற்ற சிற்றம் பலவரது; வண் பூ கயிலைச் சிலைக் கீழ்க்கணை அன்ன கண்ணீர்- வளவிய பொலிவையுடைய கயிலையினிற்கின்ற சிலையின் கீழ் வைத்த கணைபோலும் புருவத்தின் கீழுளவாகிய கண்ணையுடையீர்; நுங்கள் சிற்றிடை எது - நும்முடைய சிற்றிடை யாது? கட்புலனா கின்றதில்லை எ-று.

    பாரமது நிற்றலெனவியையும். பாரம் அதுவென எழுவாயும் பயனிலையுமாக்கி, முலைக்கீழ்ச் சிறிதாயினும் ஒன்றின்றி இவ்வுரு நிற்றல் முற்றாதென்றுரைப்பாருமுளர். அதுவென்றும் எதுவென்றும் சாதிபற்றி ஒருமையாற்கூறினான். மெய்ப்பாடு அது. பயன்: விசேடவகையான் மதியுடம்படுத்தல்.

    மேலைப் பாட்டாறனானும் வம்பமாக்கள் வினாவும் பெற்றியே கதுமெனத் தனது குறைதோன்றாவகை வினாவினான், இப்பாட்டிரண்டினாலும் இவன்குறை நங்கண்ணதேயென்பது தோழிக்குப்