5
5. இருவருமுள்வழி அவன்வரவுணர்தல்
இருவருமுள்வழியவன்வரவுணர்தல் என்பது
தலைமகளுந் தோழியுமுள் வழிச்சென்று, தலைமகன் கரந்தமொழியாற்றன்கருத்து அறிவிக்கத் தோழி
அவனினைவறியாநிற்றல். அதுவருமாறு-
ஐய நாட லாங்கவை யிரண்டு
மையறு தோழி யவன்வர வுணர்தல்.
- திருக்கோவை நெறிவிளக்கம்
5.1. ஐயுறுதல்
ஐயுறுதல் என்பது தலைமகன் தழைகொண்டுநின்று
கரந்த மொழியாற் றன்கருத்தறிவிக்க, மேனியொளியிலனாய் இப்புனத்தினின்றும் போகாது யானையோடு
ஏனம் (மான்) வினாவி இவ்வாறு பொய்கூறாநின்ற இவன் யாவனோ எனத் தோழி அவனை ஐயுற்றுக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
60. பல்லில னாகப் பகலைவென்
றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
_________________________________________________
இருவருமள்வழி அவன்வரவுணர்தல்
- இதன் பொருள்; ஐயுறுதல், அறிவுநாடல் எனவிவையிரண்டும் இருவருமுள்வழி அவன் வரவுணர்தலாம்
எ-று. அவற்றுள்-
5.1.
அடற்கதிர் வேலோன் றொடர்ச்சி
நோக்கித்
தையற் பாங்கி ஐய முற்றது.
இதன் பொருள்;
பல் இலன் ஆகப் பகலை வென்றோன் தில்லை பாடலர்போல் எல் இலன் - பல்லிலனாம்வண்ணம் பகலோனை
வென்றவனது தில்லையைப் பாடாதாரைப் போல ஒளியையுடையனல்லன்; வினா நாகத்தொடு ஏனம் - ஆயினும்
வினாவப்படுகின்றன யானையும் ஏனமுமாயிருந்தன; வில் இலன் - வில்லையுடைய னல்லன்; கையில் நாகத்
தழை-கையின் நாக மரத்தின்றழை களாயினும்; கொண்டாட்டம் வேட்டை-கொண்டாடப் படுகின்றது;
|