பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
207

7

குறையுற வுணர்தல்

7.4 இருவர் நினைவு மொருவழியுணர்தல்

   
இருவர் நினைவு மொருவழி யுணர்தல் என்பது இருவர் நினைவுங்கண்டு இன்புறாநின்ற தோழி இவ்விருவரும் இவ்விடத்து வந்த காரியம் இவன் முகமாகிய தாமரைக்கண் இவள்கண்ணாகிய வண்டு இன்பத்தேனையுண்டு எழில்பெற வந்த இத்துணையல்லது பிறிதில்லையென அவ்விருவரது நினைவுந் துணிந்துணராநிற்றல். அதற்குச் செய்யுள்-

66. மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
        மேன்மன மீட்டிவளும்
   பொய்யே புனத்தினை காப்ப
        திறைபுலி யூரனையாள்

______________________________________________________________

    அடைந்தார் பிழைப்பின், தலையாயினார் பிழையையுட் கொண்டமைதலும், இடையாயினார் அவரைத் துறத்தலும், கடையாயினார் அவரைக்கெடுத்தலும் உலகத்து உண்மையின், அம்மூவகையுஞ் செய்யாதெனினுமமையும், பிறிது உரைப்பாருமுளர். ஒருவியென்னும் வினையெச்சம் கெடாதென்னு மெதிர்மறை வினை யெச்சத்திற் கெடுதலோடு முடிந்தது.

65

7.4  அன்புறுநோக் காங்கறிந்
     தின்புறுதோழி யெண்ணியது.


   
இதன் பொருள்: இறை புலியூர் அனையாள் மை ஏர் குவளைக் கண் வண்டு இனம்-இறைவனது புலியூரையொப்பாளுடைய மையழகையுடைய குவளைபோலுங் கண்ணாகிய வண்டினம்; வாழும் செந்தாமரை வாய்-தான் வாழ்தற்குத் தகும் இவன் முகமாகிய செந்தாமரை மலர்க்கண்; எய்யேம் எனினும் - யாமறியேமாயினும்; குடைந்து இன்பத் தேன் உண்டு-குடைந்து இன்பமாகிய தேனை யுண்டு; எழில் தரும் - எழில்பெறாநின்றது. அதனால்-இவற்கு மெய்யே வேட்டையின் மேல் மனம் இல்லை - இவற்கு மெய்யாகவே வேட்டையின் மேல் உள்ளமில்லை-இவளும் புனத்தினை காப்பது பொய்யே-இவளும் புனத்தினையைக் காப்பது பொய்யே எ-று.

   
மீட்டென்பதற்கு மீட்ட தன்றே (தி.8 கோவை பா.57) லென்புழி உரைத்ததுரைக்க. ஏர்குவளை யென்னும் மியல்பு புறனடையாற்