New Page 1
குறையுற வுணர்தல்
மையேர் குவளைக்கண் வண்டினம்
வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத்
தேனுண் டெழிறருமே.
66
_____________________________________________________________
கொள்க. வண்டின மென்றாள், நோக்கத்தின்
பன்மை கருதி. எய்யே மெனினு மென்பதற்கு ஒருவரை யொருவரறியே மென்றிருப்பினு மெனினுமமையும். எழிறருதல்
- எழிலைப் புலப் படுத்துதல். இன்புறு தோழி - இருவர் காதலையுங் கண்டின்புறுதோழி. ஐய நீங்கித்
தெளிதலான் இன்புறுமெனினுமமையும். அன்றியும் இவளுடைய நலத்திற்கேற்ற நலத்தையுடைய தலைமகனைக்
கண்டின்புறுந்தோழி. என்னை, களவொழுக்கத்தில் எழினலமுடையா னொரு வனைக்கண்டு இன்புறக் கடவளோ
வெனின், எழினலமே யன்று, பின் அறத்தொடு நிலைநின்று கூட்டுகை அகத்தமிழின திலக்கண மாதலால்
தன்குரவர் வினவத் தானறத்தொடு நிற்குமிடத்துக் குரவர் தாமேசென்று மகட்கொடுக்குங் குடிப்பிறப்பினால்
உயர்ச்சியை யுடைனாதலாலும், இன்புற்றாள். இவை மூன்றற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: துணிந்துணர்தல்.
இவைமூன்றும் குறையுற வுணர்தல். என்னை,
இருவரு முள்வழி யவன்வர வுணர்தன்
முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தலென்
றம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி
- இறையனார் அகப்பொருள், 7
என்பவாகலின்.
66
குறையுறவுணர்தல்
முற்றிற்று.
|