பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
209

8

8. நாணநாட்டம்

இனி முன்னர் “நன்னிலைநாணம்” என்றோதப்பட்ட நாணநாட்டமென்பது இருவர்நினைவும் ஐயமறத் துணிந்ததோழி  அவரது கூட்டமுண்மை அறிவது காரணமாகத் தலைமகளை நாணநாடாநிற்றல். நன்னிலைநாணமென்றது நல்லநிலைபெற்ற நாணம். நல்ல நிலையாவது நாணவும் நடுங்கவு நாடுதல் அகத் தமிழிலக்கணமன்றாதலான் இக்கோவை இஃதா மென்னுமிடம் பெற்றதாம். என்னை, தலைமகள் தனக்குத் தலைமகனோடுண்டாகிய புணர்ச்சியொழுக்கத்துக்கு இவள் காவற்றோழியாகை யான இடையூறாமென்னும் உள்ளத்தளாய்நின்று, இவ்வொழுக்கத்தைத் தோழி யறியின் நன்றென்னும் நினைவு வாராநிற்க, அவ்விடத்திலே இவள் நாணநாடுகையின், நன்னிலை நாணமென்றார். என்னை,

    நாணவு நடுங்கவு நாடா டோழி
    காணுங் காலைத் தலைமக டேத்து

என்பவாகலின்.

    பிறைதொழு கென்றல் பின்னு மவளை
    யுறவென வேறு படுத்தி யுரைத்தல்
    சுனையாடல் கூற றோற்றங் கண்டு
    புணர்ச்சி யுரைத்தல் பொதுவெனக் கூறி
    மதியுடம் படுதல் வழிநாண னடுங்கல்
    புலிமிசை வைத்தல் புகலுங் காலே.

_________________________________________________________

    நாணநாட்டம் - இதன் பொருள்: பிறைதொழுகென்றல், வேறுபடுத்துக் கூறல், சுனையாடல் கூறிநகைத்தல், புணர்ச்சியுரைத்தல், மதியுடம் படுதல் என விவையைந்தும் நாணநாட்டமாம்; புலிமிசைவைத்தல் எனவிஃதொன்றும் நடுங்கநாட்டமாம் எ-று. அவற்றுள்-