பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
211

8

நாண நாட்டம்

8.2 வேறுபடுத்துக் கூறல்

   
வேறுபடுத்துக் கூறல் என்பது பிறைதொழாது தலைசாய்த்து நாணி நிலங்கிளையாநிற்பக் கண்டு, பின்னும் இவள் வழியே யொழுகி இதனையறிவோமென உட்கொண்டு, நீ போய்ச்  சுனையாடிவா வென்ன, அவளும் அதற்கிசைந்துபோய் அவனோடு தலைப்பெய்துவர, அக்குறியறிந்து அவளை வரையணங்காகப் புனைந்து வேறுபடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

68. அக்கின்ற வாமணி சேர்கண்டன்
        அம்பல வன்மலயத்
   திக்குன்ற வாணர் கொழுந்திச்
        செழுந்தண் புனமுடையாள்
   அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
        றாளங்க மவ்வவையே
   ஒக்கின்ற வாரணங் கேயிணங்
        காகுமுனக்கவளே.

68

_________________________________________________________________

பொய்வானவரென்றார்.  எனக்குப் பொறியுணர்  வல்ல  தின்மையிற் கண்கவருந்  திருமேனிகாட்டி  என்னை  வசித்தானென்னுங்  கருத்தான், உய்வான்  புகத்தில்லை நின்றோ னென்றார். சடை: செக்கர்வானத்திற் குவமை.

67

8.2.  வேய்வளைத் தோளியை வேறு பாடுகண்
     டாய்வளைத் தோழி யணங்ங் கென்றது.


   
இதன் பொருள்: அக்கு தவா மணி சேர் கண்டன் - அக்காகிய நல்ல மணிபொருந்திய மிடற்றையுடையான்; அம்பலவன் மலயத்து இக்குன்றவாணர் கொழுந்து செழும் இத்தண்புனம் உடையாள் - அவனது பொதியின் மலயத்தின் கணுளராகிய இக்குன்ற வாணருடைய மகளாகிய வளவிய இத்தண்புனங் காவனுடையாள்; அக்குன்ற ஆறு அமர்ந்து ஆடச் சென்றாள்-அக்குன்றத்தின்கணுண் டாகிய ஆற்றைமேவி ஆடப் போயினாள்; அங்கம் அவ்வவையே ஒக்கின்ற ஆறு - நின்னு றுப்புக்கள் அவளுறுப்புக்களாகிய அவற்றையேயொக்கின்றபடி; அணங்கே - என்னணங்கே; உனக்கு அவள்