பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
213

8

நாண நாட்டம்

8.4 புணர்ச்சியுரைத்தல்

புணர்ச்சி யுரைத்தல் என்பது சுனையாடல் கூறி நகையாடா நின்ற தோழி, அதுகிடக்க நீயாடிய அப்பெரிய சுனைதான் கண்சிவப்ப வாய்விளர்ப்ப அளிதொடரும் வரைமலரைச் சூட்டவற்றோ சொல்வாயாகவெனப் புணர்ச்சி உரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

70. பருங்கண் கவர்கொலை வேழப்
        படையோன் படப்படர்தீத்
   தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
        தோன்தட மால்வரைவாய்க்

____________________________________________________________

    அம்பலம்போன்மேனியெனவியையும். அங்கழிகுங்குமமென்றது முயக்கத்தான் அழியும் அவ்விடத்தழிந்த குங்குமம் என்றவாறு. மைந்நிறவார் குழற்கண் மாலையுந் தாதும் வளாவ இதனையும் இதனையும் பெறினென எச்சந்திரித்துரைப்பினு மமையும். வளாவுதல் - புணர்ச்சிக் காலத்தில் மாலையின் முறிந்த மலரும் அளகத்தப்பிய தாதுஞ் சிதறிக் குங்குமத்தினழுந்தி வாங்குதற் கருமையாக விரவுதல். மதமென்றது காமக்களிப்பாலுண்டாகிய கதிர்ப்பை.

69

8.4.  மணக்குறி நோக்கிப்
     புணர்ச்சி யுரைத்தது.


   
இதன் பொருள்: பருங் கண் கவர் கொலை வேழப் படையோன் பட -பரிய கண்ணையும் விரும்பப்படுங் கொலையையுமுடைய கருப்புச் சிலையாகிய படையையுடையவன் மாள; படர் தீத் தரும் கண்நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை வாய் - செல்லுந் தீயைத்தருங் கண்ணையுடைத்தாகிய நுதலையுடைய தில்லையம்பலத்தானது பெரிய மால்வரையிடத்து; அவ் வான் சுனை - நீயாடிய அப்பெரிய சுனை; கருங்கண் சிவப்ப கனிவாய் விளர்ப்ப - கரியகண் சிவப்பத் தொண்டைக் கனிபோலும் வாய் விளர்ப்ப; அளி பின்வரும் கண் ஆர் கள் மலை மலர் சூட்டவற்றோ-அளிகள் பின்றொடர்ந்து வருங் கண்ணிற்கு ஆருங் கள்ளையுடைய மலைமலரைச் சூட்டவற்றோ? சொல்வாயாக எ-று.