க
நாண நாட்டம்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
றோமற்றவ்
வான்சுனையே.
70
__________________________________________________
பருங்கண்ணென மெலிந்துநின்றது.
தடமும் மாலும் பெருமையாகலின் மிகப்பெரியவென்பது விளங்கும். தடம்-தாழ்வரையெனினுமமையும்.
வருங்கண் வரைமலரென்பது பாடமாயின், அளிதொடரு மிடத்தையுடைய வரைமலரென்க. இடமென்றது பூவினேக
தேசத்தை. இன்னும் வரைமலரென்பது ஒருபூவை முழுதுஞ்சூட்டினானாயின் தலைவி அதனையறிந்து பேணவேண்டி
வாங்குதலைக் கூடும். ஆகையால் இவளிஃதறியாமற் றோழியறிவது பயனாக ஒருபூவின் முறித்ததொருசிறிய
விதழைச் சூட்டினான்; ஆகையான் வரைந்தமலரென்றாளாம். மற்று: அசைநிலை. இவை நான்கும் நாணநாட்டம்.
மெய்ப்பாடு :
நகை. பயன்: கரவுநாடி யுணர்தல்.
இவை முன்னுற வுணர்தலின் விகற்பம்.
இவைநான்கும் பெருந்திணைப்பாற்படும். என்னை அகத்தமிழ்ச் சிதைவாகலான், என்னை, “கைக்கிளை
பெருந்திணை யகப்புற மாகும்” இவற்றுள் கைக்கிளையென்பது ஒருதலைக்காமம். பெருந் திணை யென்பது
பொருந்தாக் காமம். என்னை,
ஒப்பில் கூட்டமு மூத்தோர் முயக்கமுஞ்
செப்பிய வகத்தமிழ்ச் சிதைவும்
பெருந்திணை
என்பவாகலின். நாணநாடலாகாமை:
இவள் பெருநாணினளாதலான், தான் மறைந்து செய்த காரியத்தைப் பிறரறியின் இறந்துபடும்: ஆதலான்,
நாணநாட்டமாகாது. நடுங்கநாட்டமு மாகாது, இருவர்க்கும் உயிரொன்றாகலான் இறந்துபடுமாதலின். ஆதலால்,
அகத்தமிழிற்கு இவை வழுவாயின. இனி இதற்கு வழுவமைதி ”நன்னிலைநாணம்” என்பதனானறிக.
70
|