8
நாண நாட்டம்
8.5 மதியுடம்படுதல்
மதியுடம் படுதல் என்பது பலபடியும்
நாணநாடிக் கூட்டமுண்மையுணர்ந் தோழி இம்மலையிடத்து இவ்விருவர்க்கும் இன்பத் துன்பங்கள்
பொதுவாய் வாராநின்றன; அதனால் இவ்விருவர்க்கும் உயிரொன்றேயென வியந்து கூறாநிற்றல், அதற்குச்
செய்யுள்-
71. காகத் திருக்கண்ணிற்
கொன்றே
மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம்
யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி
லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு
மொன்றாய்
வருமின்பத் துன்பங்களே.
71
_____________________________________________________________
8.5. அயில்வேற் கண்ணியொ
டாடவன்றனக் குயிரொன்றென
மயிலியற் றோழி மதியுடம் பட்டது.
இதன் பொருள்:
யாவையும் ஆம் ஏகத்து ஒருவன் - எல்லாப் பொருள்களுமாய் விரியும் ஒன்றையுடைய வொருவன்;
இரும்பொழில் அம்பலவன் - பெரிய பொழில்களாற் சூழப்பட்ட அம்பலத்தையுடையான்; மலையில் தோகைக்கும்
தோன்றற்கும் இன்பத் துன்பங்கள் ஒன்றாய் வரும்-அவனது மலையில் இத்தோகைக்கும் இத்தோன்றற்கும்
இன்பத் துன்பங்கள் பொதுவாய் வாராநின்றன; அதனால்
- காகத்து இரு கண்ணிற்கு மணி ஒன்றே கலந்தாங்கு இருவர் ஆகத்துள் ஓருயிர் யாம் இன்று கண்டனம்-காகத்தினிரண்டு
கண்ணிற்கும் மணியொன்றே கலந்தாற்போல இருவர் யாக்கையுள் ஓருயிரை யாமின்று கண்டோம் எ-று.
யாவையுமாமேகம் - பராசக்தி. அம்பலவன்
மலையில் இன்று யாங்கண்டன மென்று கூட்டி, வேறோரிடத்து வேறொரு காலத்து வேறொருவர் இது கண்டறிவாரில்லையென்பது
படவுரைப்பினு மமையும். கலந்தாரிருவரென்பது பாடமாயின், ‘காகத்திருகண்ணிற் கொன்றே மணி’ யென்பதனை
எடுத்துக்காட்டாக வுரைக்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: மதியுடம்படுதல்.
நாணநாட்டம் முற்றிற்று.
|